கிட்டத்தட்ட முடிந்த விசாரணை! திருப்பரங்குன்றம் தீபம் குறித்து இன்று வெளியாகிறது இடைக்கால உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றத்தில் தீபம் எங்கு ஏற்றப்பட வேண்டும்? என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில் இன்று இடைக்கால உத்தரவு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலை மீது, சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் உள்ள கல் தூணில்.. கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கோரி வந்தன.

Tiruparankundram Supreme Court Madurai

ஆனால், கடந்த திமுக ஆட்சியில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை, நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வில் வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ராம ரவிக்குமார் கோரிய கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுக்கொள்ள அனுமதி கொடுத்து இருந்தார். ஆனாலும், கடந்த திமுக ஆட்சியில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு.. கடந்த 150 ஆண்டுகளாக எங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறதோ.. அதாவது உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது, அதே இடத்தில் கடந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதன் மூலம், நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்துவிட்டதாக கூறி மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கொடுத்த உத்தரவை உறுதி செய்தனர். இருப்பினும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்திருக்கிறது.

நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கிட்டதட்ட நிறைவடைந்துள்ளன. நேற்று முன்தினம் அரசு தரப்பு மற்றும் தர்கா தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று மூல மனுதாரரான ராம ரவிக்குமாரின் வாதங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 10:30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்குகிறது. இன்று இந்துத்துவ அமைப்புகள் அமைப்புகளின் வாதங்கள் கேட்கப்பட உள்ளன. இதை அடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இன்று விட்டு விட்டால் நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் நீதிமன்றம் இயங்காது. எனவே பெரும்பாலும் இன்றே இடைக்கால உத்தரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+