ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிரடி முடிவு! தீபாவளி கட்டணக்கொள்ளைக்கு விடிவு? புக்கிங் செயலிகளுக்கு செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெட் பஸ், அபி பஸ் போன்ற செயலிகளுக்கு மாற்றாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இணைந்து ரோமி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்கின்றனர். இந்த செயலி மூலமாக வழித்தடங்கள், புறப்படும் நேரம், பேருந்து வகை, கட்டணம் மற்றும் இருக்கை வசதிகளை ஒப்பிட்டு, பயணிகள் தங்களுக்கு ஏற்ற பேருந்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்ய முடியும். பயணிகள் www.roamie.co.in இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். Roamie செயலியை Google Play Store மற்றும் Apple App Store மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தனியார் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் ஆம்னி பஸ்களில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினை ஒவ்வொரு பண்டிகை நாட்கள் வரும் போதும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.

Omni Bus Romi App Ticket Booking Transport

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் கேட்டால், செயலிகள் மீது பழியை போடுவதும், சங்கத்தில் இணையாத புதிய பேருந்துகள் கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில், ரெட் பஸ், அபி பஸ் போன்ற செயலிகளுக்கு மாற்றாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இணைந்து ரோமி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளனர். இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள Roamie (www.roamie.co.in) பேருந்து டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. நகரங்களுக்கு இடையிலான பேருந்துப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) முன்னெடுப்பான ONDC திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

பேருந்து உரிமையாளர்களின் முன்பதிவு கமிஷன் செலவைக் குறைப்பதும், பயணிகளுக்கு எளிய முன்பதிவு வசதியையும் நியாயமான கட்டணத்தையும் வழங்குவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். பேருந்து உரிமையாளர்களின் அன்றாடத் தேவைகளையும், பயணிகள் எதிர்பார்க்கும் வசதிகளையும் கருத்தில் கொண்டு Roamie வடிவமைக்கப்பட்டுள்ளது. வழித்தடங்கள், புறப்படும் நேரம், பேருந்து வகை, கட்டணம் மற்றும் இருக்கை வசதிகளை ஒப்பிட்டு, பயணிகள் தங்களுக்கு ஏற்ற பேருந்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

இணையவழி டிக்கெட் விற்பனைக்காக முன்பதிவுத் தளங்களைச் சார்ந்திருக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு, கமிஷன் ஒரு முக்கியச் செலவாக உள்ளது. இந்தச் செலவைக் குறைத்து, ஒவ்வொரு டிக்கெட்டிலும் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் வருவாயை மேம்படுத்த Roamie உதவும். செலவு குறைவதன் பயனைப் பயணிகளுக்கும் வழங்குவதே இதன் நோக்கம். மேலும், ONDC வலையமைப்பின் மூலம், அதனுடன் இணைந்துள்ள பல்வேறு செயலிகளில் பேருந்துச் சேவைகளைப் பயணிகள் கண்டறிந்து முன்பதிவு செய்யும் வாய்ப்பும் உருவாகிறது.

Roamie நிர்வாகம் தெரிவித்துள்ளபடி, அறிமுகக் கட்டத்தில் இந்தத் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் மேலும் பல உரிமையாளர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் www.roamie.co.in இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். Roamie செயலியை Google Play Store மற்றும் Apple App Store மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆம்னி பேருந்துக் கட்டணத்தில் பயணிகள் பாதிக்கப்படாத வகையில், நியாயமான கட்டணத்தையும் வெளிப்படையான முன்பதிவு வசதியையும் வழங்குவதை Roamie நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு பேருந்து நிறுவனங்களின் சேவைகளை ஒரே இடத்தில் தேடி, புறப்படும் நேரம், கட்டணம், பேருந்து வகை மற்றும் இருக்கை வசதிகளை ஒப்பிட்டு முன்பதிவு செய்யலாம். முன்பதிவை உறுதி செய்வதற்கு முன்பே செலுத்த வேண்டிய முழுக் கட்டணத்தையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், நேரடி கண்காணிப்பு வசதியுள்ள பேருந்துகளின் இருப்பிடத்தைப் பயணத்தின்போது அறிந்துகொள்வதுடன், பிராந்திய மற்றும் சிறிய பேருந்து நிறுவனங்களின் சேவைகளையும் எளிதாகக் கண்டறியலாம்.

குறைந்த கமிஷன் செலவில் இணையவழி முன்பதிவுகளைப் பெறுவதுடன், வழித்தடங்கள், புறப்படும் நேரங்கள், இருக்கை இருப்பு மற்றும் முன்பதிவுகளை ஒரே நிர்வாகத் தளத்தில் கையாளும் வசதியையும் Roamie வழங்குகிறது. முன்பதிவு மற்றும் பயணத் தேவை குறித்த தகவல்களின் அடிப்படையில் பேருந்துச் சேவைகளைத் திட்டமிடவும், அதிக இருக்கைகள் நிரம்பும் வகையில் செயல்படவும் இது உதவுகிறது. மேலும், ONDC இணைப்பு மூலம் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தும் பயணிகளைச் சென்றடைந்து, வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கிறது.

பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் பயனளிக்கும் வெளிப்படையான முன்பதிவு அமைப்பை உருவாக்குவதே Roamie-யின் நோக்கம். அதிக கமிஷன் செலவைக் குறைத்து, பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவையை வழங்க இந்த முயற்சி உதவும். பேருந்து உரிமையாளர்கள் தங்களது சேவைகள், இருக்கை இருப்பு மற்றும் முன்பதிவுகளை எளிதாக நிர்வகிக்க Roamie உதவும்.

உரிமையாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தொழில் வளர்ச்சியையும் பயணிகளுக்கான சேவையையும் மேம்படுத்த முடியும். கோயம்புத்தூர் மற்றும் மேற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து உரிமையாளர்கள் தங்களது சேவைகளை அதிகமான பயணிகளிடம் கொண்டு சேர்க்க Roamie வாய்ப்பளிக்கிறது. சிறிய மற்றும் பிராந்திய பேருந்து நிறுவனங்களுக்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும். என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+