அன்று வெளியிட்ட ஆதங்கம்.. தனிப்பட்ட விஷயத்தில் ஏமாற்றம்.. ரஜினி மனசை உறுத்துவது எது? சஸ்பென்ஸ்!
தனக்கு தனிப்பட்ட விஷயத்தில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
சென்னை:தனக்கு தனிப்பட்ட விஷயத்தில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நபர்தான் நடிகர் ரஜினிகாந்த். மத்திய பாஜக அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை நேரடியாக ஆதரிப்பதுதான் ரஜினியின் வழக்கம்.
சிஏஏ, என்பிஆர், 8 வழி சாலை திட்டம் என்று எதை பற்றி பேசினாலும் எந்த கவலையும் இன்றி ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கிறார். தனக்கு எதிராக விமர்சனம் வரும் என்பதை பற்றி கூட கவலைப்படாமல் நடிகர் ரஜினிகாந்த், பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

விமர்சனங்கள்
பாஜகவிற்கு ஆதரவாக பேசிய ரஜினி தற்போது பெரியாரையே எதிர்க்க தொடங்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி தைரியமாக பெரியார் குறித்து பேச தொடங்கி உள்ளார். அதேபோல் அமித் ஷாவை பல முறை ரஜினி வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார். மோடியை பாராட்டி இருக்கிறார். திமுக எதிர்ப்பு அரசியலை அவர் வெளிப்படையாக கையில் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. சிஏஏ ஆதரவாக பேசியதும் பெரிய சர்ச்சையானது.

வெளிப்படை ஆதரவு
அதற்கு ஏற்றபடி ரஜினிக்கு பின் சப்போர்ட் செய்ய பெரிய அளவில் பாஜகவினர் இருக்கிறார்கள். முக்கியமாக குருமூர்த்தி தொடங்கி தற்போது சுப்பிரமணியன் சுவாமி கூட ரஜினிக்கு சப்போர்ட் செய்ய தொடங்கிவிட்டனர். அமித் ஷா ரஜினியை அதிகம் நம்புகிறார். பாஜக நாராயணன், எச். ராஜா ஆகியோர் கூட ரஜினிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

சிஏஏ எப்படி
ரஜினிக்கு இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏவிற்கு ஆதரவாக பேசியது அவருக்கு பெரிய அளவில் சிக்கலாக முடிந்தது. இதனால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்தான் ரஜினி என்று புகார்கள் வைக்கப்பட்டது. இதனால்தான் முன்பே ரஜினி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள். என்னை பாஜகவின் ஆதரவாளர் என்று கூறுகிறார்கள் என்று ரஜினி ஆதங்கமாக தெரிவித்து இருந்தார். தனது ஆதங்கத்தை வெளிப்படையாக ரஜினிகாந்த் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

ஏற்கனவே இப்படி
இதற்கு முன்பே தனக்கு காவி சாயம் பூசப்படுவதை ரஜினி நேரடியாக எதிர்த்து இருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். அதே போல எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள். ஆனால் நான் அதில் சிக்க மாட்டேன். வள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன், என்று குறிப்பிட்டவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தான் பாஜகவிற்கு ஆதரவு என்பதை பல இடங்களில் ரஜினி மறுத்துள்ளார். ரஜினி ஒரு பக்கம் இப்படி மறுத்தாலும் இன்னொரு பக்கம் அவரின் பேட்டி எல்லாம் பாஜகவிற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது.

சிக்கல் எப்படி
சிஏஏ குறித்து ரஜினி பேசியது இஸ்லாமியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.பாட்ஸா படத்தில் இருந்தே ரஜினிக்கு தீவிர ரசிகராக இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் ரஜினிக்கு இதனால் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். அதோடு, ரஜினி பாஜக பக்கம் சாய்ந்து விட்டார் என்றார்கள். இது ஒருவேளை ரஜினி மனசை உறுத்தி இருக்கலாம். இதனால்தான் இஸ்லாமியர்களை சமாதானம் செய்யும் விதமாக கடந்த வாரம் இஸ்லாமிய தலைவர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தினார்

இன்று எப்படி
அதேபோல் இன்று மாவட்ட செயலாளர்கள் உடன் ரஜினி நடத்திய சந்திப்பில் இதை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. அதாவது ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது. அதிகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார். இதை ரசிகர்கள் விரும்பவில்லை என்று ரஜினியிடம் மாவட்ட செயலாளர்கள் புகார் அளித்து உள்ளனர் என்கிறார்கள். இதுதான் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்கிறார்கள்.

ஏமாற்றம்
எல்லோரும் தனக்கு காவி சாயம் பூசுகிறார்கள், ரசிகர்களும் தன்னை அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பதைத்தான் ''தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது'' என்று ரஜினி மறைமுகமாக கூறியுள்ளார் என்கிறார்கள். இதனால் விரைவில் பாஜகவிற்கு எதிராக ரஜினி வெளிப்படையாக பேச வாய்ப்புள்ளது. அதோடு ரஜினி பாஜக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. விரைவில் ரஜினி இந்த சஸ்பென்ஸை உடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications