அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் பாதகமா? சாதகமா? அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கூறுவது என்ன?
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் பாதகமா? சாதகமா? என்று விவாதங்கள் சமூக வலைதளங்களிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும், அரசு ஊழியர்கள் மத்தியிலும் நடந்து வருகிறது. இதில் பலர் சாதகம் என்று ஒரு புள்ளி விவரங்களையும், இல்லை இது பாதகம் என்று சிலர் ஒரு புள்ளி விவரங்களையும் கூறி வருகிறார்கள். அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும் தகவல்களை பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதியம் குறித்து பரிசீலிக்க குழு அமைப்போம் என்றும், அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்த 4.5 வருடங்களை கடந்த நிலையில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதையடுத்து கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஏபிஎஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கும் வகையில் ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. அது சாதகமாக அல்லது பாதகமாக என்று விவாதிக்கும் முன்பு தமிழக அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
* புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (சி.பி.சி.) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
அரசு ஏற்க போகும் செலவுகள் விவரம்
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு ரூ.13 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.11 ஆயிரம் கோடியை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த பங்களிப்புத் தொகை, பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த டி.ஏ.பி.எஸ். திட்டத்தை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒரு மனதாக வரவேற்று, அதை செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சாதகமாக பாதகமா?
தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்துவற்கு ஒரு முறை நிதியாக ரூ.13 ஆயிரம் கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடியும் என ரூ.24 ஆயிரம் கோடி வேண்டும். பின்னர் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். இந்தநிலையில் அரசின் இந்த ஓய்வூதிய திட்டம் பாதகமா? சாதகமா? என்ற பெரிய பட்டிமன்றமே அரசு ஊழியர்கள் மத்தியில் நடக்கிறது. அதற்கான அரசாணை வெளிவந்தால் அதன் முழு விவரம் தெரியவரும் என்பதால் அரசாணைக்காக அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
30 வயதிற்குள் சேர வேண்டும்
ஆனால் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது பழைய ஓய்வூதியம் திட்டம். இப்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) பெயர் மாற்றி அறிவித்து உள்ளது என்றும், அரசின் அறிவிப்பின்படி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால் 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படியென்றால் 30 வயதுக்குள் அரசு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள். மற்றவர்களுக்கு 50 சதவீதம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் சில அரசு ஊழியர்கள்.
10 சதவீதம் சம்பளம் பிடிக்கப்படும்
இப்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெறும் போது குறிப்பிட்ட தொகை ரொக்கமாக கையில் கிடைத்து விடும். இனி அந்த தொகை வராது. எனவே இந்த திட்டம் அரசு ஊழியர்களின் நலனுக்கானது அல்லது எதிரானது. எங்களிடம் இருந்து ஓய்வூதியத்திற்கு 10 சதவீதமும், வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவீதமும் பிடிப்பதால் நாங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் சம்பளம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் சில அரசு ஊழியர்கள். எங்களிடம் பிடித்து எங்களுக்கே ஓய்வூதியம் என்பது சரியானதா?. இந்த 10 சதவீத பிடித்தம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சில அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.
50 சதவீதம் ஓய்வூதியம்
எனினும் தமிழக அரசின் ஓய்வூதியப்படி, 50% சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதோடு, விலைவாசிக்கு ஏற்ப DA உயர்வையும் தருகிறது. இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும், ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை உறுதி கிடையாது என்றும் முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் பல அரசு ஊழியர்கள் அரசின் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications