திமுகவின் பெரிய வாக்குறுதி! 1 வாரத்தில் வெளியாகும் மேஜர் அறிவிப்பு? ஸ்டாலின்-செந்தில் பாலாஜி மேஜிக்
சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும். இதற்காக ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சட்டசபையில் கூறி இருந்தார். முதல் கட்டமாக 500 மதுபான கடைகளை குறைப்போம் என்று அவர் அறிவித்து இருந்தார்.

அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கடைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதை மாவட்ட அளவில் டாஸ்மாக் நிர்வாகம் குழுக்களையும் கண்டறிந்துள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்து வருகின்றனர். இந்த லிஸ்ட் தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து 500 கடைகளும் கண்டறியப்பட்டு லிஸ்ட் இறுதி செய்யப்பட்டுவிட்டது,
விரைவில் லிஸ்ட் முதல்வருக்கு அனுப்பப்படும். அதன்பின் இந்த கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாகும். லிஸ்ட் இறுதியான நிலையில் அதை சரிபார்க்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த வார இறுதிக்குள் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

சிசிடிவி: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக்கிலேயே இப்படி மதுவில் சயனைடு கலந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இது போல டாஸ்மாக்கில் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்வது, கூடுதலாக 20 - 30 ரூபாய் காசு கேட்பது போன்ற முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
இந்த முறைகேடுகளை, விபத்துக்களை தவிர்க்க வசதியாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அறிக்கை தயார் செய்யப்பட்ட பின் டாஸ்மாக் கவுண்டர்களில் சிசிடிவிக்கள், பொருத்தப்படும்.
அதேபோல் உள்ளே பார்களிலும் சிசிடிவிக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications