இன்று என்ன நடந்தாலும்.. இது மட்டும் கண்டிப்பா நடக்கும்! சிஎஸ்கே டீம் எடுத்த மெகா முடிவு! அப்போ தோனி?
சென்னை: குஜராத் அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் தோனியும், சிஎஸ்கே அணியும் முக்கியமான ஒரு முடிவை எடுக்க போவதாக சிஎஸ்கே அணி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.

சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
தோனியால் எல்லா மைதானங்களும் மஞ்சளாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
தோனி கலவையான பதில்: தனது ஓய்வு குறித்து தோனியும் கலவையான பதில்களை அளித்து வருகிறார்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் என்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.
இதையடுத்து பேட்டி அளித்த ரெய்னாவும்.. தோனி இந்த சீசன் கப் அடிப்பார்.. அதன்பின் அடுத்த சீசன் ஆடிவிட்டுதான் ஓய்வு பெறுவார் என்று கூறினார், மொத்தத்தில் தோனி ஆடுவாரா, ஓய்வு பெறுவாரா என்று தெரியாத குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த போட்டியிலும் ஓய்வு பற்றி கேட்டதற்கு தோனி.. அதை பற்றி எல்லாம் முடிவு செய்ய 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை பற்றி யோசிக்க வேண்டும். இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. அதனால் பார்க்கலாம். விளையாடும் வீரராகவோ அல்லது நிர்வாகியாகவோ சிஎஸ்கே அணியுடன்தான் எப்போதும் இருப்பேன், என்று தோனி கூறியுள்ளார்.
தோனி தனது பேச்சில் சிஎஸ்கே அணியில் நிர்வாகியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார். அணியில் இதனால் தோனி நிர்வாகியாக தொடர போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பைனல் மேட்ச்: சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அணி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தோனி ஓய்வு பெறுவதை பற்றி அறிவிக்க மாட்டார். முடிவு எடுக்க மாட்டார்.
ஆனால் தோனி கேப்டனாக ஆடும் கடைசி சீசன் இதுதான். சிஎஸ்கேவில் ருத்துராஜ் - ஸ்டோக்ஸ் - ஜடேஜா - ரெய்னா நால்வரில் ஒருவர் கண்டிப்பாக அடுத்த சீசன் கேப்டன் ஆவார். தோனி கண்டிப்பாக கேப்டன் ஆக தொடர மாட்டார். இன்று நடக்கும் போட்டிக்கு பின் அணியில் என்ன நடக்கிறதோ நடக்கவில்லையோ.. இது கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள் அணி நிர்வாகத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications