தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா இல்லையா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் நாளை செயல்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தீபாவளிக்கு மறுதினம், அதாவது நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக விடுமுறை விடப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுகட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகை என்பது ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும்.

தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் அமாவாசை அன்றும், வடமாநிலங்களில் அதற்கு அடுத்த நாள் வரையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அதாது தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒரு நாளும், சில மாநிலங்களிலும் இரண்டு நாட்களும், சில மாநிலங்களில் 4 நாட்கள் வரையிலும் கொண்டாப்படும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாப்பட்டது. பொதுவாகவே தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் விடுமுறைவிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் அக்டோபர் 31ம் தேதிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அக்டோபர் 31, நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3 என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதையடுத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் பேர் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்து ஊருக்கு சென்றனர். தீபாவளி பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் நவம்பர் 4ம் தேதி மீண்டும் சென்னை உள்பட அவரவர் வேலை செய்யும் ஊருக்கு திரும்பினர். மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு திரும்பினார்கள்.
இதனிடையே அரசு நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போதே, இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படியே சனிக்கிழமையான நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications