சீமான் வாக்குகளை அப்படியே.. அள்ளி சாப்பிட போகும் விஜய்.. களம் லேசாக மாறுது? செக் நாம் தமிழருக்கு!
சென்னை: நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி மூலம், விஜய் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து, தீவிரமான உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
அவரது அரசியல் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. அது என்னவென்றால், சீமானின் நாம் தமிழர் கட்சியின் (NTK) வாக்கு வங்கியை விஜய் மெதுவாகக் குறைத்து வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீப வாரங்களில், ஊழல், மீனவர் உரிமை, வேலையின்மை மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து விஜய் பேசி வருகிறார். அவரது சுற்றுப்பயணத்தை காண பல ஆயிரம் பேர் கூடி வருகிறார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று சீமான் பக்கம் சென்றவர்கள்.. தற்போது விஜயின் பேச்சால் அவர் பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர்.
சீமான் - விஜய் போட்டி
பல இளம் வாக்காளர்களுக்கு, விஜய் ஒரு புதிய நம்பிக்கையாகவும், திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான ஒரு புதிய முகமாகவும் தோன்றி வருகிறார். ஆனால் இது வாக்குகளாக மாறுமா என்பது கேள்வியாக இருந்தாலும் சீமானுக்கு அவர் பெரிய போட்டியாக மாறி வருகிறார்.
விஜயின் இந்த வளர்ச்சி சீமானுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி பல ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்களிடையே ஒரு நிலையான தளத்தை உருவாக்கியுள்ளது. விஜய்யின் அணுகுமுறையை சீமான் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பி வருகிறார்.
திரை நட்சத்திரமாகப் பெறும் புகழ் அரசியலுக்குப் போதாது என்று அவர் வாதிடுகிறார். "கூட்டங்கள் எப்போதும் உறுதியான வாக்குகளாக மாறாது" என்று சீமான் அண்மையில் குறிப்பிட்டார். விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குப் பலர் சினிமா ஆர்வத்தின் காரணமாகவே வருகிறார்கள் என்று அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.
விஜய் சீமான் மோதல்
அரசியல் நோக்கர்கள், விஜய்யும் சீமானும் ஒரே வகையான வாக்காளர்களுக்காகப் போட்டியிடுவதாகக் கூறுகின்றனர். அதாவது, இரண்டு பெரிய கட்சிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள இளம் தமிழர்களின் வாக்குகளையே இருவரும் இலக்காகக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே விஜய் - சீமான் இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள்.. அதை வைத்து எடை போடாதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதறு கிடையாது. பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு திருச்சியில் வைக்கிறேன். அதை பாருங்கள் மாநாட்டில் எவ்வாறு ஒரு தலைவன் உரை நிகழ்த்துவேன் என்று அதை பாருங்கள் மாநாடு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். மாநாடு எப்படி இருக்கும் என்று புரியும்.
விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல் சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள் தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள். அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று அழைக்கப்பட வேண்டும். அங்கிள் என்று ஏன் கூப்பிடுகிறது. அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என விஜய் மாநாட்டில் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
விஜய் - சீமான் மோதல் உச்சம்
கடந்த சில நாட்களாகவே விஜய் - சீமான் இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே நாம் தமிழருடன் நெருக்கமாக இருக்கும் சாட்டை துரைமுருகன் விஜயை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது சீமானும் நேரடியாக தாக்க தொடங்கி உள்ளார். தமிழக அரசியல் களம் திமுக vs தமிழக வெற்றிக் கழகம் என்று மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களம் நாம் தமிழர் vs தமிழக வெற்றிக் கழகம் மாறி உள்ளது கவனம் பெற்றுள்ளது.
விஜய்க்கு இருக்கும் சிக்கல்
விஜய்யின் பிரச்சாரம் வலுவாகத் தொடர்ந்தால், நகர்ப்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு சதவீதத்தைப் தக்கவைத்துக் கொள்ளப் போராட நேரிடலாம் என்று ஒரு அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டார். அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மையான பலம் தேர்தல்களின் போது மட்டுமே சோதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விஜய்யின் புகழ் கவனத்தைப் பெற்றாலும், அவரது கட்சியிடமிருந்து தெளிவான கொள்கை வாக்குறுதிகளை மக்கள் இன்னும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தமிழ் பிரச்சனைகளைத் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் சீமான் வாக்காளர்களுக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்.
தற்போது, விஜய்யின் வருகையால் ஏற்படும் மிகப்பெரிய தாக்கம், திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளில் பிளவு ஏற்படுவதுதான். நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் ஒரே மாதிரியான வாக்காளர்களை ஈர்ப்பதால், இந்த பிளவு மறைமுகமாக ஆளும் திமுக 2026-ல் தனது நிலையை வலுப்படுத்த உதவும் என்று சிலர் வாதம் வைப்பது குறிப்பிடத்தக்கது. .












Click it and Unblock the Notifications