இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தோழமை சுட்டுதலா? கூட்டணி முறிவா? காட்டமாக பேசிய திருமா.. அப்போ திமுக?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன் நேற்று வைத்த சில விமர்சனங்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக - விசிக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து அவரின் உடன் நேற்று திருவள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமா காட்டமான கருத்து: இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி உள்ளார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.
கூட்டணி முறிவா?: இந்த நிலையில்தான் திமுக - விசிக இடையே உள்ள இந்த விரிசல் காரணமாக கூட்டணி உடையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விவகாரம் , சில அமைச்சர்கள் விவகாரம் என்று பல விஷயங்களில் திருமா - திமுக இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது உள்ள விரிசல் கூட்டணி முறிவிற்கு காரணமாக அமையுமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
1. இருவரின் கூட்டணி முறியும் என்ற வாதத்தை வைப்பதே அதிமுகதான். விசிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக ஒரு பக்கம் முயன்று வருகிறது.
2. சில தலித் அமைப்புகள், சில ஆக்டிவிஸ்டுகள் திமுக - விசிக கூட்டணியை விரும்பாத நிலையில் அதற்கான லாபிகளை செய்து வருகின்றனர்.
3. இப்படிப்பட்ட நிலையில்தான் திருமாவின் விமர்சனம் திமுக - விசிக கூட்டணியில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
4. திருமா விமர்சனம் கூட்டணி ரீதியான தோழமை சுட்டுதலா அல்லது கூட்டணி முறிவிற்கான தொடக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications