சாட்டை துரைமுருகன் நாதகவிலிருந்து நீக்கப்பட்டாரா? இணையத்தில் வைரலாகும் அறிக்கை.. உண்மை என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டதாக இணையத்தில் அறிக்கை ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த அறிக்கை குறித்த முழு விவரமும், உண்மை பின்னணியும் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. குமரியில் இருக்கும் மலைகளை குடைந்து கிரானைட் எடுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்தார்.
இயற்கை வளங்களை தமிழ்நாடு அரசு காக்க தவறிவிட்டதாக அவர் விமர்சனம் வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
நாம் தமிழர் கட்சி மேடையில் முதல்வர் ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாக அறுவருக்கத்தக்க வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு
சாட்டை துரைமுருகன் மீது போலீசார் 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன், பத்மனாபபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டதாக இணையத்தில் அறிக்கை ஒன்று வைரலாக பரவி வருகிறது.

நீக்கம்
கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவரின் கருத்துக்களுக்கு இனி நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது. அவருடன் நாம் தமிழர் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று சீமான் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த அறிக்கையில் இன்றைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன
ஆனால் உண்மையில் துரைமுருகன் இப்போது கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் மார்ச் 2021லேயே நீக்கப்பட்டுவிட்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சாட்டை துரைமுருகன் அப்போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதன்பின் கூட சீமானை மேடை ஒன்றில் துரைமுருகன் விமர்சனம் செய்து இருந்தார். பின்னர் கட்சியில் இணையாமல் அவ்வப்போது நாம் தமிழர் கட்சியுடன் ஏற்பட்ட சமரசம் காரணமாக கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார். நாம் தமிழர் மேடைகளில் பேசிக்கொண்டு இருந்தார்.

நாம் தமிழர்
கட்சியில் இல்லை என்றாலும் கட்சிக்கு ஆதரவாகவும், கட்சி ஆர்ப்பாட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். கடந்த முறை திருச்சியில் கார் நிறுவனம் ஒன்றில் இளைஞரை மிரட்டிய வழக்கில் கைதான போதும் கூட சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினர் கிடையாது. இந்த வழக்கில் பெயிலில் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அரசையும், திமுகவையும் விமர்சித்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

விருந்தினர்
சிறைக்கு போய் வெளிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சி குமரியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருந்தினராக கலந்துக்கொண்டு திமுகவிற்கும் அரசுக்கும் எதிராக பேசினார். அதோடு தன்னை சீமான் அரவணைத்ததாகவும், கஷ்டமான நேரங்களில் சீமான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் சாட்டை துரைமுருகன் பேசினார். விருந்தினராக மட்டுமே இந்த மேடையில் துரைமுருகன் பேசினார்.

உறுப்பினர் கிடையாது
ஆனால் அதிகாரபூர்வமாக இவர் இன்னும் கட்சியில் இணையவில்லை. முன்னர் சாட்டை துரைமுருகனை நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேற்றிய அறிக்கையையைதான் இப்போது தேதியை மாற்றி அவர் நீக்கப்பட்டுவிட்டதாக வெளியிடுகிறார்கள். மற்றபடி சாட்டை துரைமுருகன் இப்போதும் கூட நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இல்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications