சிலிர்க்குதே.. விமானத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை பார்த்ததும்.. விமான பணிப்பெண் செய்த சம்பவம்! செம
சென்னை: நிலவில் வெற்றிகரமாக சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் கால்பதித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் விமானத்தில் பயணித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை அடையாளம் கண்ட விமான பணிப்பெண் செய்த சம்பவம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது.
பூமியின் துணைக்கோளாக நிலவு உள்ளது. இதனால் நிலவு குறித்த ஆய்வில் உலக நாடுகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்படி நிலவில் முதல் முறையாக ரஷ்யா கால்பதித்து ஆய்வு செய்தது. அதன்பிறகு அமெரிக்கா மனிதர்களை நிலவில் தரையிறக்கி ஆய்வு செய்தது.

இதைடுத்து சீனாவும் லேண்டரை தரையிறக்கி ரோவர் மூலம் ஆய்வு செய்தது. இந்த 3 வல்லரசு நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக இந்தியா சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்த நிலையில் கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பான முறையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், சல்பர், குரோமியம், டைட்டேனியம் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் நிலவின் பிளாஸ்மாவின் அளவு என்பது கணிக்கப்பட்டதை விட குறைந்த அளவில் உள்ளதாக சூப்பரான அப்டேட்டை இன்று வழங்கி உள்ளது. உண்மையில் சந்திரயான் 3 திட்டம் என்பது இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் பெருமை தேடி தந்துள்ளது.
இதனால் பிரதமர் மோடி நேரடியாக தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்து பெங்களூர் சென்று இஸ்ரோ தலைவர் சோமநாத் மற்றும் சந்திரயான் -3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இஸ்ரோ தலைவர் சோமநாத் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். இந்த வேளையில் சோம்நாத்தை விமான பணிப்பெண் பூஜா ஷா அடையாளம் கண்டு கொண்டார். இதையடுத்து அவர் சோம்நாத்தை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த விமான பணிப்பெண் பூஜா ஷா விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்யும் மைக்கில் பேசி இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பூஜா ஷா கூறியதாவது:
இஸ்ரோ தலைவர் சோமநாத் எங்களின் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்கிறார். அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு என்பதை பெருமையாக கருதுகிறேன். எங்கள் விமானத்தில் இதுபோன்ற நாட்டுக்கான ஹீரோக்கள் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவை பெருமைப்படுத்தியதற்கு நன்றி'' என்றார். இதை கேட்ட பிற பயணிகள் கைகள் தட்டி சோமநாத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் விமான பணிப்பெண் ஒருவர் சோமநாத்துக்கு உணவு, பானங்களை வழங்கினார். அதோடு பாராட்டு கடிதமும் வழங்கினார். அதனை சிரித்த முகத்துடன் சோமநாத் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த வீடியோவை பூஜா ஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications