ஏலியன்கள் வேற்றுகிரகங்களில் வசிப்பார்களா? நிலவில் இருக்கிறார்களா? இஸ்ரோ சிவன் விளக்கம்
சென்னை: ஏலியன்ஸ்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அளித்த பதில் என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் ஏலியன்கள் குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. அது அவர்கள் எடுக்கும் திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது. அவ்வப்போது வானில் பறக்கும் தட்டை பார்த்தேன், என் கேமராவில் வித்தியாசமான உருவம் உள்ளது, நீளமான தலை கொண்ட மனிதனை வானில் பார்த்தேன் என்றெல்லா் பலர் சொல்லி அதை செய்திகளாக படித்துள்ளோம்.

ஆனால் இன்னமும் ஏலியன்களுக்கான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலனை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இன்றைய தினம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவராக இருந்த சிவன் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சந்திரயான் 1 க்கும் சந்திரயான் 2 க்கும் இடையே நீண்ட இடைவெளிக்கான காரணம் தொழில்நுட்பத்தை கட்டமைத்தோம். ஆனல் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3க்கு இடையே கால இடைவெளி ஏன் குறைவு என்றால் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் தொழில்நுட்பத்தை மட்டுமே மேம்படுத்தியுள்ளனர்.
மங்கல்யான் 1 செயலிழந்துவிட்டது. மங்கல்யான் 2 வை விண்ணில் செலுத்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அது போல் வேற்றுகிரகங்களான வெள்ளி கிரகத்திற்கு செல்ல திட்டங்கள் முடிவாகிக் கொண்டிருக்கிறது. ஏலியன்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் பேரில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் தேடுகிறார்கள். பூமியை போல் இன்னொரு கிரகம் இருக்கலாம்.
அப்படி இன்னொரு கிரகம் இருந்தால் அங்கு ஏலியன்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் முடிவாகவில்லை. இஸ்ரோவின் முயற்சிகள் ஏலியன்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் போல் இல்லை. நமது முயற்சிகள் அறிவியலை நோக்கித்தான் இருக்கிறது. நிலவின் ஆரிஜின், அங்குள்ள கனிம வளங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
மாணவர்கள் விஞ்ஞானியாக வேண்டும் என்றால், அவர்களுக்கு அறிவியல் மீது அதீத ஆர்வம் இருக்க வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அதை Why, what how என துருவி துருவி கேட்க வேண்டும். விஞ்ஞானியாக வேண்டும் என்றால் உத்வேகம் இருக்க வேண்டும். சிறிய வயதில் ஆசிரியர் ஆக வேண்டும், கல்லூரி படிக்கும் போது ஏரோநாட்டிக்கல் என்ஜினியராக வேண்டும் என்ற கனவுகள் எனக்கு இருந்தது. ஆனால் எம்.இ. படிக்கும் போதுதான் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வாறு சிவன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications