"உலகத்திற்கே வழிகாட்டும் இந்தியா.." இறங்கி அடிக்கும் இஸ்ரோ.. சூப்பர் தகவல் சொன்ன இஸ்ரோ சிவன்
சென்னை: விண்வெளி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து இந்தியா உருவாக்கவுள்ள புதிய சாட்டிலைட் உலகில் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் இந்தியாவும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இன்று உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை இஸ்ரோ மூலமே செலுத்துகிறது.
அந்தளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. இத்துடன் நில்லாமல் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் கூட இந்தியா ஆய்வு செய்தே வருகிறது.

இஸ்ரோ சிவன்
இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா இணைந்து உருவாக்கும் புதிய சாட்டிலைட் குறித்து சில முக்கிய தகவல்களை முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பகிர்ந்துள்ளார். சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 23ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முன்னாள் தலைவர் சிவன் மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

புதிய சாட்டிலைட்
இதில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், "இஸ்ரோ, நாசா இனைந்து சிந்தடிக் ஆப்ரேட்டர் சாட்டிலைட் என்ற புதிய வகை செயற்கைக்கோளை உருவாக்க உள்ளனர்.. இது பூமியில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்தபடியே அழை பூமியில் நடக்கும் 1 செண்டி மீட்டர் நகர்வைக் கூட எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். கால நிலை மாற்றங்கள், பனிப் பிரதேசங்களில் பணி உருகும் நிலை உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம்.

பல கேள்விகளுக்குப் பதில் தரும்
மேலும், மீனவர்களுக்கு உதவும் வகையில் எந்த பகுதியில் அதிக மீன் இருக்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும். இதைச் செயலி வடிவில் கூட நாம் கொண்டு வரலாம். அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கவுள்ள இந்த செயற்கைக்கோள் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல உலகத்திற்கே பல முக்கிய கேள்விகளுக்கு விடைகளைக் கொடுக்க உள்ளது. இந்தியாவின் நேவிகேஷன் சிஸ்டம் இப்போது வரை சரியாகவே வேலை செய்து வருகிறது..

அதிக சாட்டிலைட்கள்
இப்போது வரை அனுப்பப்பட்டுள்ள ஏழு செயற்கைக்கோளில் இருந்து கிடைக்கும் டேட்டாவை சில மொபைல்கள் மட்டுமே பயன்படுத்திகினறன. அதை பிரபல்படுத்தும் முயற்சியில் விரைவில் இஸ்ரோ இறங்க உள்ளது. இப்போது விண்ணில் பல செயற்கைக்கோள் இருந்தாலும்.. இன்னுமே கூட நமக்கு அதிகளவில் சாட்டிலைட் தேவைப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நமது பாரத பிரதமர் (Unlocking Indians Potential In Sector) புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

சீர்திருத்தங்கள்
இதன் மூலம் ராக்கெட் அல்லது செயற்கைக்கோளைச் செலுத்துவதோ உருவாக்குவதோ இஸ்ரோ மட்டுமின்றி.. தனியார் நிறுவனங்களும் செய்யலாம். இதுபோன்ற ஒரு புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே, இந்த துறையில் தனியாரைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்டோர் விண்வெளி செயல்பாட்டைக் கண்டு வருகின்றனர்.. இதனால் வரும் 2030இல் விண்வெளி சுற்றுச்சூழல் இந்தியாவிலேயே அதிக அளவில் இருக்கும்.. நம்முடைய தேவை மட்டுமல்ல சர்வதேச மார்கெட்டினையும் நாம் பிடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications