சூரியனுக்கு போகிற வழியில்.. ஆதித்யா எல்1 பண்ணதை பாருங்க! இஸ்ரோ ரிலீஸ் செய்த போட்டோ! தொற்றிய பரபரப்பு
சென்னை: சூரியனை நோக்கி செல்ல இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம், பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது சுற்றுபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு உள்ளது .ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது பூமியை சுற்றி வரும் ஆதித்யா எல் 1 விரைவில் சுற்று பாதையை முடித்து சூரியனை நோக்கி நகரும்.
சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும்.
புகைப்படம்: இந்த நிலையில்தான் சூரியனை நோக்கி செல்ல இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி சூரியனை நோக்கி செல்லும் வழியில் ஆதித்யா எல்1 தன்னை தானே செல்பி எடுத்துள்ளது. ஆதித்யாவில் இருக்கும் ஆய்வு கருவிகள் இந்த கேமராவில் பதிவாகி உள்ளன.

எங்கே இருக்கும்?: இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.
எப்படி செல்லும்?: நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 கருவிகள் இதில் சுமந்து செல்லப்பட உள்ளன. மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல அமைப்புகளை பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் விண்கலம் ஏழு பேலோடுகளை எடுத்துச் செல்கிறது.
நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதேபோல் ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
இந்த விண்கலத்தில் இருக்கும் liquid apogee motor (LAM) என்பதுதான் இதை விண்ணுக்கு சுமந்து செல்லும். அதாவது புவி வட்டப்பாதையில் பிஎஸ்எல்வி ஆதித்யாவை நிறுத்திய பின் அது பூமியை சுற்றி சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக வட்டப்பாதையை அதிகரிக்கும். இதில் வட்டப்பாதையை அதிகரிக்க liquid apogee motor (LAM) பயன்படுத்தப்படும்.
அப்படியே வட்டப்பாதையை அதிகரித்து எல் 1 பாயிண்ட் அருகே ஆதித்யா எல் 1 செல்லும். அங்கிருந்து மேலும் சில வட்டங்களை அடித்து liquid apogee motor (LAM) எல் 1 பாயிண்டில் சுற்ற தொடங்கும். இதற்கு பெரும்பாலும் 127 நாட்கள் ஆகும். அந்த வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது சுற்றுபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது .ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications