சம்பளதாரர்கள் ஷாக்! ஏப்ரல் 18 ஆகிடுச்சு.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஓபன் ஆகவில்லை.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கியும் கூட .. இதுவரை வருமான வரி பக்கம் ஓபன் ஆகவில்லை. அதாவது ITR ரிட்டர்ன் செய்யும் பக்கம் இதுவரை திறக்கப்படவில்லை. அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.

பழைய வருமான வரி முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிக்கான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை. இதனால் சிறிய வீடுகளில் வாடகை விடுபவர்கள்.. குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுபவர்கள் பயன் அடைவார்கள். அதோடு பலர் புதிதாக வாடகைக்கு வீடு விடவும் வழிவகுக்கும். வாடகை வீடுகளின் எண்ணிக்கை இதனால் உயரும். நேற்று பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

It is April 18 Why has the ITR return portal for the 2025-26 regime not yet been opened

அதுவே புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

வருமான வரி தாக்கல் கட்டாயம்

ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம். இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ல் தொடங்கி.. ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் இதில் 7.5 கோடிக்கு அதிகமானோர் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

இன்னும் திறக்கவில்லை

ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கியும் கூட .. இதுவரை வருமான வரி பக்கம் ஓபன் ஆகவில்லை. அதாவது ITR ரிட்டர்ன் செய்யும் பக்கம் இதுவரை திறக்கப்படவில்லை. அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.

வருமான வரி refund கிடைக்காது

பலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் ரீ பண்ட் கிடைக்காமல் போகலாம். முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்யவது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரி பண்ட் சென்றுவிடும்.

வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+