முன்ன மாதிரி கிடையாது.. இப்போதெல்லாம் மரியாதையே இல்லை.. உடைத்து பேசிய திருமா.. என்ன இப்படி சொல்றாரே!
என் தலையில் இருக்கும் முடியை விட மோசமாக பதவியை பற்றி நினைப்பவன் நான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்பு போல மரியாதையே இல்லை என்று விசிக எம்பி திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீப நாட்களாக விசிக எம்பி தலைவர் திருமாவளவனின் மேடை பேச்சுக்கள் தமிழ்நாடு அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா பாஜக, பாமகவிற்கு எதிராக கடுமையாக பேசினார்.
அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.

திருமாவளவன்
அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்த இருக்கு. இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டு பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட உங்களால் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட உங்களால் கொடி ஏற்ற முடியாது. ஓட ஓட விரட்டுவோம். யாரிடம் வாலை ஆட்டுகிறாய். தமிழ்நாட்டில் உங்கள் வேலை பழிக்காது. பதவியை பார்த்து பல்லை இளிப்பவன் அல்ல திருமாவளவன். பதவியை துச்சமாக நினைப்பவன்.

சட்டசபை உறுப்பினர்
என் தலையில் இருக்கும் முடியை விட மோசமாக பதவியை பற்றி நினைப்பவன் நான். சட்டமன்ற உறுப்பினர் ஆன இரண்டு ஆண்டுகளில் பதவியை தூக்கிவீசிவிட்டு வந்தவன் நான், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். ஆனால் அதன்பின் திமுகவோடு கூட்டணி தொடரும். திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க போவது இல்லை. கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று திருமா பதில் அளித்து இருந்தார்.

மதுரை
இந்த நிலையில் நேற்று மதுரை நாகமலை புதுக்கோட்டையில், முன்பு போல மரியாதையே இல்லை என்று விசிக எம்பி திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. திருமா படிப்பகம் என்ற நூலக திறப்பு விழாவில் பேசிய, முன்பெல்லாம் எம்பி என்றால் பெரிய மரியாதை இருக்கும். எம்பி பதவிக்கு என்று நிறைய பவர் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. எம்பி கடிதம் கொடுத்தால் கூட அதற்கு மரியாதை தர மாட்டார்கள். முன்பெல்லாம் எம்பிக்கள் கடிதம் கொடுத்தால் BSNL தொலைபேசி இணைப்பு கூட கிடைக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை.

பெங்களூர்
பெட்ரோல் பங்க் கிடைக்கும், வீட்டு சமையல் கேஸ் இணைப்பு கூட எம்பி கையெழுத்து போட்டால் கிடைக்கும், நாங்கள் சிபாரிசு செய்தால் வேலையும் கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது, எங்கள் பதவிக்கு மரியாதையே இல்லை. எம்பிக்களை யாரும் மதிப்பது இல்லை. எம்பியா அப்படி என்றால் என்ன.. அப்படி என்றால் என்ன தம்பி என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்குத்தான் மரியாதை கொடுக்கிறார்கள். எல்லோரும் படிக்க வேண்டும். எல்லோரும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள் நன்றாக படித்து அதிகாரிகள் ஆக வேண்டும் என்பதே முக்கியம். அப்போதுதான் உங்களுக்கான மதிப்பு இருக்கும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications