டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு.. ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாகக் கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், விளையாட்டு மைதானங்களில், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் வினியோகிக்கப்பட மாட்டாது என விளக்கமளித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, மது விலக்கு சட்டப்படி, பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும், விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு அரங்குகள் பொது இடங்கள் என்பதால் அங்கு மது பானம் வினியோகிக்க கூடாது என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், கருத்தரங்குகளில் மது வினியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாநாடுகளிலும் மதுபானம் வினியோகிக்க கோருவர். இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி டிக்கெட் வழங்கினால் மதுபானம் இலவசம் என தெரிவித்தால் அது விற்பனையாகாதா? எனக் கேள்வி எழுப்பினர். அரசு தலைமை வழக்கறிஞர், மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் மட்டுமே அரசாங்கம் செயல்படுவதாகக் கூறுவது தவறு என்று விளக்கினார்.
இதையடுத்து, விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு அரங்குகள் பொது இடம் எனும் போது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, இது சம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications