எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. சென்னை, திருவண்ணாமலையில் 100 இடங்களில் ரெய்டு
சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ வேலுவிற்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளிலும் 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திமுகவின் பசையான அமைச்சர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஜெகத்ரட்சகனை தொடர்ந்து தற்போது எ.வ. வேலுவை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகளிலும், மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித்துறை என்பது அதிகம் பணம் புழங்கும் துறை. எ.வ. வேலு திமுகவிற்காக அதிகம் செலவு செய்யும் அமைச்சர்களில் ஒருவர். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் நிறைய செலவு செய்பவர். பசையான துறையை கையில் வைத்துள்ள பசையான அமைச்சர் எ.வ. வேலு.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவில் அதிகம் பணம் வைத்துள்ளவர்களை குறி வைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவிற்கு சொந்தமான 100 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications