Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேப்பரை பார்த்து படிக்காதீங்க.. அப்பாவு சொல்ல.. உடனே பாய்ந்து வந்த எடப்பாடி! “எல்லாரும் அறிவாளியா?”

Subscribe to Oneindia Tamil

சென்னை : சட்டப்பேரவையில் இன்று குறிப்பைப் பார்த்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏவிடம், சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதிங்க என்று கூற, அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் படிக்க இது எக்ஸாம் அல்ல எனத் தெரிவித்தார். சட்டசபையில் இந்த விவாதத்தால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பேப்பரை வைத்து வாசித்தபோது சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதீங்க என்று கூறினார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் சொல்ல, அதற்கு அப்பாவு மீண்டும் விளக்கம் அளிக்க, அதற்கு எடப்பாடி பழனிசாமி பேச என பேரவையில் இதுதொடர்பாக ஒரு விவாதம் ஏற்பட்டது.

குறுக்கிட்ட சபாநாயகர்

குறுக்கிட்ட சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் குறிப்பை வைத்து பேசிக் கொண்டிருந்ததார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துக்கொண்டு பேச அனுமதிக்கமாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என்றார்.

துரைமுருகன் சொன்ன விஷயம்

துரைமுருகன் சொன்ன விஷயம்

இதையடுத்துப் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், ஒருமுறை ஜோதியம்மாள் சட்டப்பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது குடியாத்தம் துரைசாமியை பேப்பர் வைத்து படிக்க வேண்டாமென அறிவுறுத்தினார். அப்போது எழுந்த கருணாநிதி, குடியாத்தம் துரைசாமி சிறந்த பேச்சாளர், குறிப்பே இல்லாமல் மூன்று மணி நேரம் கூட பேசக்கூடியவர் என்பதால் அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள் என்றார் எனத் தெரிவித்தார்.

இது எக்ஸாம் இல்லயே

இது எக்ஸாம் இல்லயே

அதற்கு சபாநாயகர் அப்பாவு, குறிப்பு வைத்துக்கொண்டு பேசுவது தவறு என நான் சொல்லவில்லை. 4 பக்கங்களை ஒரு வரியில் பேசுவதை போல உறுப்பினர்கள் பேச முயற்சிக்க வேண்டும். வரி வரியாக அப்படியே பேசுவதால் நேரம் அதிகம் எடுக்கும் என்றார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "குறிப்பு இல்லாமல் பேசுவதற்கு இது எக்ஸாம் அல்ல. பொதுப்பணித் துறை முக்கியமான துறை என்பதால் அதில் ஏராளமான புள்ளி விவரங்கள் வரும். தவறான தகவல் எதுவும் அவையில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகவே குறிப்பெடுத்து பேசுகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு அறிவிருக்குமோ அது மாதிரி தான் பேசுவார்கள், எல்லாரும் அறிவாளியாக இருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

அறிவாளி

அறிவாளி

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, "அறிவாளி என்பதற்காக நான் எதுவும் பேசவில்லை. பேப்பரை பார்க்காமல் பேசினால் தெளிவாக இருக்கும் என்பதாலும், சொல்ல வேண்டிய விஷயத்தை விரைந்து சொல்ல முடியும் என்பதாலே கூறினேனே தவிர வேறு எதுவும் தவறாக சொல்லவில்லை" என்று தெரிவித்தார். இந்த விவாதம் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+