இஸ்லாமியர்களுடன் சங்கரய்யா தோழமையாக பழகியதை மறக்க முடியாது! முஸ்லீம் லீக் உருக்கமுடன் இரங்கல்!
சென்னை: இஸ்லாமிய சமுதாய மக்களுடன் சங்கரய்யா தோழமை உணர்வுடன் பழகியதை எப்போதும் மறக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியலில் ஈடு செய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக உருகியுள்ளார்.

இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சங்கரய்யா பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த சங்கரய்யா, தனது பொதுவாழ்வில் மிகவும் நேர்மையுடனும், சமூக உணர்வுடனும் செயல்பட்டு, மக்கள் நலப்பணியாற்றியதை தமிழக மக்கள் யாரும் மறக்க முடியாது என்றும் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
சங்கரய்யாவின் சேவைகளை பாராட்டி, தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சங்கரய்யா, இஸ்லாமிய சமுதாய மக்களுடன் நல்ல தோழமை உணர்வுடன் பழகியதை எப்போதும் மறக்க முடியாது.
தியாகி சங்கரய்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவருக்கும் தனது இரங்கலையும், ஆறுதல்களையும் கூறிக் கொள்வதாகவும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications