தோளில் கலப்பையை கட்டி இழுத்து.. மாடாய் மாறி உழுத 75 வயது விவசாயி.. வந்து விழுந்த ஜாக்பாட் பரிசு! செம
சென்னை: கோவிந்த் என்ற 75 வயது விவசாயி மிகவும் ஏழ்மை நிலைமையில் வசித்து வருகிறார்.. 2 பிள்ளைகள் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக கலப்பையை தோளில் கட்டி விவசாயம் பார்த்து வருகிறார்.. நிதி நெருக்கடி அதிகமாகிவிட்டதால், தன்னுடைய விவசாய நிலத்தில் மனைவியுடன் சேர்ந்து கடந்த 8 வருடமாகவே இப்படித்தான் நிலைத்தை உழுது வருகிறார்.. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி, அதுகுறித்த செய்திதான் தற்போது வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநில விவசாயி ஒருவரின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது.. அந்த வீடியோவில், முதிய விவசாயி ஒருவர் தன்னுடைய தோளில் கலப்பையை பூட்டிக்கொண்டு தனது மனைவியுடன் சேர்ந்து விவசாய நிலத்தில் உழுது கொண்டிருக்கிறார்..

இந்த வயதில் கலப்பையை தோளில் சுமந்து ஏன் இவர் உழுவ வேண்டும்? என்ற அதிர்ச்சி கேள்விகள் வலம்வந்தன.
வயதான விவசாயி
லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தை சேர்ந்த அந்த விவசாயியின் பெயர் கோவிந்த் பவார்.. 75 வயதாகிறது.. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இரண்டரை ஏக்கர் வறண்ட நிலமும் உள்ளது..
இந்த நிலத்தை உழுது பிழைப்புக்கு வழி தேட முயன்றார் கோவிந்த்.. ஆனால், அவரிடம் டிராக்டர் அல்லது எருதுகள் வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ காசு இல்லை. அதனால்தான், இந்த தள்ளாத வயதிலும் தளராமல் தன்னுடைய 60 வயது மனைவியுடன் சேர்ந்து மனித கலப்பையாக மாறி உழவு பணியை செய்து வருவதாக தெரிகிறது..
மனித கலப்பை
மனித கலப்பையாக மாறிவிட்டதால் கைகள் நடுங்குகின்றன, கால்களால் நிற்க முடியவில்லை, தலை நிமிர முயற்சிக்கிறது, உடல் ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் வேதனையுடன் இந்த கோவிந்த் சொல்வதையும் கேட்க முடிகிறது.
இந்த வயதான காலத்தில் இவருக்கு அரசு முன்வருவதற்கு என்ன தடை? விவசாயத்தை நவீனமாக்குவோம், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொல்லும் அரசியல்வாதிகள், இதுபோன்ற ஏழை விவசாயிகளுக்கு உதவாதா? என்று நெட்டிசன்கள் கொதித்து கேள்வி எழுப்பினார்கள்.. அதேசமயம், 75 வயது விவசாயியின் மன உறுதியையும் பாராட்டி வருகிறார்கள்..
ஒரு ஜோடி காளை பரிசு
இந்தநிலையில் லாத்தூர் மாவட்ட கிரந்திகாரி ஷேத்காரி சங்கதானாவினர், கோவிந்த்துக்கு ஒரு ஜோடி காளையை பரிசாக வழங்கினார்கள்.. மேளதாளங்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டே ஹடோல்டி கிராமத்திலுள்ள கோவிந்த வீட்டுக்கு அந்த காளைகளை கொண்டு வந்து தந்தார்கள் .
அதேபோல, தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், கோவிந்த்தை சந்தித்து, நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியிருக்கிறது..
மராட்டியத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், ஒரு விவசாயி, மாடாக மாறி உழைக்கும் வீடியோவின் தாக்கம் வேகமாக பரவியதையடுத்து, இப்போது மராட்டிய கூட்டுறவு அமைச்சர் பாபாசாகேப் பாட்டீலும், விவசாயியின் கடன்களை முழுவதுமாக அடைக்க உதவுவதாக உறுதியளித்துள்ளார். இந்த விவசாயியின் செய்திகள்தான் இணையத்தில் ஆக்கிரமித்து வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications