Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பிய சோகம்.. கண்ணெல்லாம் கலங்கி.. ஜெகத்ரட்சகன் சொன்ன "வார்த்தை".. திடீர்னு நிசப்தம்.. அட நாராயணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கள் ரத்தத்தை கொட்டியாவது, பேனா சின்னத்தை கலைஞருக்காக எழுப்புவோம் என்று மூத்த தலைவர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.. ஜெகத்ரட்சகனின் இந்த பேச்சினை திமுகவினர் இணையத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும் அரக்கோணம் தொகுதி எம்பியுமான ஜெகத்ரட்சகன், தலைசிறந்த எழுத்தாளர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, இவரது மேடை பேச்சுக்கள் என்றால், மிகவும் பிடிக்கும்..

ஜெகத்ரட்சகனின் தமிழையும், அவரது இலக்கிய புலமையையும் வியந்தும், ரசித்தும் கவனிப்பார்.. இந்நிலையில், சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

விம்மி விம்மி: அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கருணாநிதி பற்றி பேச பேச, ஜெகத் ரட்சகனின் கண்கள் கலங்குகின்றன.. நா தழுதழுக்கின்றன.. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஜெகத் ரட்சகன் பேசியதில் இருந்த சில வரிகள் இவை:

"கம்பன், ராமாயணத்தை மட்டும்தான் தொட்டான்.. ஆனால், கலைஞர் மட்டும்தான், எல்லா இலக்கியங்களையும் தொட்டு பார்த்து சுவைக்க செய்தார்.. அந்த பெருந்தகைக்கு, பேனா சின்னம் வைக்கக்கூடாது, என்று தப்பாக பிறந்தவர்கள் எல்லாம் இன்று சொல்கிறார்கள்.. எங்கள் ரத்தத்தை கொட்டி, அந்த பேனா சின்னத்தை நாங்கள் உருவாக்குவோம்..

jagathrakshakans happy tears and excellent speech about kalaignar karunanidhi

பிறப்பொக்கும்: கலைஞரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.. உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது.. அந்த நிகழ்ச்சிக்கு கலைஞரையே ஒரு பாட்டு எழுத சொன்னார்கள் எல்லாரும்.. அதற்கு கலைஞரும், பாட்டு எழுதுவதாக சொல்லி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடலை எழுதினார்.. அதை எழுதி தளபதி ஸ்டாலினிடம் காட்டினார்.. இந்த பாட்டு எப்படி இருக்கு?ப்பா என்று கேட்டார்..

அதற்கு தளபதி, "நல்லா இருக்குது..ப்பா" என்றார்.. உடனே கலைஞர், "இந்த பாட்டை வெளியிடணும் என்றால், ஒரே ஒரு நிபந்தனை.. இந்த பாட்டுக்கு ஏஆர் ரஹ்மான்தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னார்.. தளபதியும், அதற்கு சரி என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார்..

ஏ.ஆர்.ரஹ்மான்: அப்போது நான் கலைஞரிடம் கேட்டேன், "இசையமைப்பாளர்கள் எம்எஸ்வி இருக்காரு, கேவி மகாதேவன் இருக்காரு, இன்னும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் இருக்கும்போது, ஏஆர் ரஹ்மானை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்து இருக்கீங்க" என்று கேட்டேன்.

அதற்கு கலைஞர் சொன்னார், "அவருக்கு 2 ஆஸ்கர் விருது கிடைத்தது.. உலகத்திலேயே 2 ஆஸ்கர், ஒரே நேரத்தில் கிடைத்த தமிழன் ஏஆர் ரஹ்மான் மட்டுமே.. அந்த விருதை வாங்குவதற்காக மேலைநாட்டுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது பத்திரிகையாளர்கள், அவரிடம் மைக்கை நீட்டி, "விருது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்..

தமிழ்மொழி: அதற்கு ரஹ்மான், "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் சொன்னார்.. அதற்கு அங்கிருந்த பத்திரிகையாளர்கள், "இப்போது நீங்க தமிழில் சொன்னதை, அப்படியே ஆங்கிலத்திலும் சொல்லுங்களேன், அப்போதுதானே உலகம் முழுவதும் இது போய் சேரும், அனைவருக்கும் தெரியும்" என்றனர்..

உடனே ஏஆர் ரஹ்மான், "நான் தமிழில் சொன்னால், அது கடவுளுக்கு தெரியும்.. கடவுளுக்கு தெரிந்த மொழி தமிழ்தான்.. அதனால்தான் தமிழில் சொன்னேன்" என்று பத்திரிகையாளர்களிடம் பதிலளிக்கிறார்.. இதை என்னிடம் ஆச்சரியத்துடன் சொல்லிய கலைஞர், அதனால்தான், ஏஆர் ரஹ்மான் மட்டுமே, இதற்கு இசையமைக்கணும் என்கிறேன் என்றார்.. அந்த அளவுக்கு உன்னிப்பான தலைவன்தான் கலைஞர்...

கோபாலபுரம்: இப்படித்தான், ஒருநாள் காரில் நாங்கள் போய்கொண்டிருக்கிறோம்.. எப்போதுமே நான், உட்கார்ந்தால் நாராயணா, எழுந்தால் நாராயணா, படுத்தால் நாராயணா என்று சொல்லும் பழக்கம் உடையவன்.. அப்படித்தான் அன்று கோபாலபுரத்தில் இருந்து எஸ்ஐடி காலனி கிளம்புவதற்காக காரில் ஏறி உட்கார போனேன்.. வழக்கம்போல், நாராயணா என்று சொன்னேன்..
உடனே கலைஞர், யோவ் இடமில்லையே என்றார்..

உடனே நான், ஒருவேளை காரில் எனக்குதான் இடமில்லையோ என்று நினைத்துக்கொண்டு, சரிங்க..ண்ணா, நான் வேண்டுமானால் காரில் இருந்து இறங்கி கொள்கிறேன், அப்பறம் வர்றேன் என்று சொன்னேன்.

நாராயணா: உடனே கலைஞர், யோவ் இல்லையா, நீ சொன்ன நாராயணனுக்கு காரில் இடமில்லையே என்றார்.. அதற்கு நான் சொன்னேன், அந்த நாராயணனே நீங்கதானே அண்ணே.. உங்களைதான் நான் அப்படி சொன்னேன் என்றேன்.

உலகத்துல கலைஞர் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது.. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், அந்த மாதிரி தலைவரை பார்க்கவே முடியாது. அன்பை தருவதில் அவர் ஒரு அட்சயப்பாத்திரம்" என்று நா தழுதழுக்க, கண் கலங்கி சொன்னார் ஜெகத்ரட்சகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+