மன்னிப்பு கிடையாது.. வருத்தம்தான்.. அந்த பெயரை பற்றி பேசாத ஜெய் பீம் இயக்குனர்- இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் படத்தின் சர்ச்சை குறித்து அளித்த விளக்கம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
நடிகர்கள் சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி அமேசானில் ஹிட் அடித்த படம் ஜெய் பீம். இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஞானவேல் இயக்கத்தில் ராஜ்கண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றையும், முன்னாள் நீதிபதி சந்துரு நடத்திய சட்ட போராட்டம் குறித்தும் புனைவோடு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அக்னி கலசம் காட்சி ஒன்றில் பயன்படுத்தப்பட்டதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் வன்னியர் குல சின்னத்தை இந்த காட்சி அவமதிப்பது போல இருப்பதாக வன்னியர் சங்கத்தினரும் புகார் அளித்துள்ளனர்.

அந்தோணிசாமி
இன்னொரு பக்கம் வில்லன் கதாபாத்திரத்திற்கு உண்மையான பெயரான அந்தோணி சாமி என்ற பெயரை வைக்காமல் குருமூர்த்தி என்று வைத்ததையும் பாமகவினர் எதிர்த்து உள்ளனர். குருமூர்த்தி என்ற பெயர் காடுவெட்டி குருவை குறிப்பதாக உள்ளதாக வன்னியர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். காடுவெட்டி குரு குடும்பத்தினரும் இதை எதிர்த்து உள்ளனர். இதுதான் படத்திற்கு எதிராக பாமகவினரும், வன்னியர் சங்கமும் விமர்சனங்களை வைக்க காரணம்.

கோரிக்கை
இதில் பாமகவினரும், வன்னியர் சங்கமும் இந்த படம் தொடர்பாக இரண்டு கோரிக்கைகளை வைத்து இருந்தனர். முதல் கோரிக்கை அக்னி கலசத்தை நீக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை, குருமூர்த்தி என்ற பெயரை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகர் சூர்யா, அவரின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஆகியோர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

விளக்கம்
இந்த நிலையில் இன்று படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. 'ஜெய் பீம்' படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

நோக்கம் என்ன?
பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை . 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.
சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன்' பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

துரதிர்ஷ்டவசமானது
நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது, என்று கூறியுள்ளார்.

மன்னிப்பு இல்லை
இதில் அக்னி கலசம் காலண்டரில் பயன்படுத்தப்பட்டது ஏன் என்று மட்டுமே இயக்குனர் ஞானவேல் விளக்கி இருக்கிறார். மாறாக அதற்காக பாமக வைத்த கோரிக்கையை ஏற்று மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம் தெரிவிப்பதாக தனது அறிக்கையில் இயக்குனர் குறிப்பிட்டு வருந்தியுள்ளார். அதே போல் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் இல்லை
அதேபோல் இந்த அறிக்கையில் எங்கும் குருமூர்த்தி பெயரை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் விளக்கவில்லை. படத்தில் குருமூர்த்தி பெயரை பயன்படுத்தியதற்கு காடு வெட்டி ரு குடும்பத்தினர், வன்னியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை பற்றி இயக்குனர் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்தம்
இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் குறிப்பிட்டு இருக்கிறார். மாறாக தனிப்பட்ட வகையில் குருமூர்த்தி பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு எந்த காரணத்தையும், விளக்கத்தியும் இயக்குனர் குறிப்பிடவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications