NPHH ரேசன் கார்டு இருக்கா? நில ஓனர்களுக்கு குட் நியூஸ்! பட்டா பஞ்சாயத்து ஓவர்..‘இந்த’ தேதி முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிற்கு கட்டுப்பட்டுள்ள கிராமங்களுக்கும் வருகின்ற 20.05.25 முதல் 30.05.25 வரை (சனி ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களை தவிர) அதாவது 7 நாட்கள் வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் பட்டா பெயர் மாற்றம், ரேசன் கார்டு மாற்றம், ஓஏபி, வருமான சான்றிதழ், விதவை ஊதிய திட்டம் உள்ளிட்ட எந்தெந்த சேவைகள் வழங்கப்படும் என்பது குறித்து தகவல் உரிமை சட்ட ஆர்வாளர்கள் அமைப்பான பத்து ரூபாய் இயக்கம் விளக்கியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, தாலுகா அலுவலகத்திற்கு ஜமாபந்திக்கு செல்பவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தவறாமல் எடுத்துச் செல்லவும்.. தவறும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட சேவையை நீங்கள் பெறுவதில் சிரமம் ஏற்படலாம்.
பட்டா மாறுதல் செய்ய விரும்புபவர்கள் இணையதளம் வழியாக பட்டா மாறுதல் விண்ணப்பம் சமர்ப்பித்து அதன் அசலை (Original) எடுத்து செல்ல வேண்டும் மேலும் அன்றைய தேதி வரை நீங்கள் வைத்திருக்கும் சொத்தின் பதிவிறக்கம் செய்யப்பட்ட வில்லங்க சான்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இறந்த நபர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களின் பட்டாவை மாற்ற வேண்டுமானால் அவருடைய இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டாயம் தேவை. அதன் பின்னர் பட்டாவில் இடம் பெறும் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் கட்டாயம் தேவை.
இதர சேவைகள்
1. குழந்தைகளின் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் கொடுப்பவர்கள் கட்டாயம் குழந்தைகளின் பெற்றோர்களுடைய சாதி சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.. ஒருவேளை பெற்றோர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை என்றால் கணவரின் சகோதரர்களின் வாரிசுகளின் சாதி சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.. எதுவுமே இல்லாத பட்சத்தில் கிராம நிர்வாக அலுவலரை அணுகி அவர்கள் கூறும் வழிமுறையை பின்பற்றவும்....
2. OAP -- விண்ணப்பம் கொடுப்பவர்கள் கட்டாயம் BPL கார்டு அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆண் வாரிசுகள் கட்டாயம் இருக்கக் கூடாது.
3. விதவை ஊக்க தொகைக்கு விண்ணப்பம் கொடுப்பவர்களுக்கு கட்டாயம் 40 வயது முடிந்து இருக்க வேண்டும்.. 18 வயதிற்கு மேல் ஆண் வாரிசுகள் இருக்க கூடாது.
4. வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் போன்றவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
5. பத்திரம் இல்லாமல் பட்டா மட்டுமே வைத்திருப்பவர்கள். . இதில் எவ்வித வில்லங்கமும் இல்லை என சார் பதிவாளர் (Sub - Register) அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய முடியும்..
6. உச்சவரம்பில் வழங்கப்பட்ட நிலமாக இருந்தால் நிச்சயம் 1974 உச்சவரம்பு ஆர்டர் காப்பி, கண்டிஷன் F பட்டா மற்றும் வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற தடையில்லா சான்று (NOC) வைத்திருக்க வேண்டும்.. மேலும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் செய்ய முடியாது.
7. ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் அதில் இருக்கும் அனைத்து நபர்களின் ஆதார் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த குறிப்பிட்ட ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
8. ஒரு வருடத்திற்கு மேலாக இறப்பை பதிவு செய்யாதவர்கள். . இறப்பு பதிவு செய்யப்படவில்லை என சார் பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கலாம்..
9. வாரிசு சான்றிதழ் பெற விரும்புபவர்கள். அவர்களின் வாரிசுகள் யாரேனும் ஒருவர் விண்ணப்பம் கொடுத்தாலே போதும்.. ஆனால் இறந்த நபருடைய அனைத்து வாரிசுகளின் ஆதார் அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும். .
10. இலவச வீட்டு மனை பட்டாவிற்கு விண்ணப்பம் கொடுக்கலாம்." என்கின்றனர்.












Click it and Unblock the Notifications