விபூதி, குங்குமம் வைத்த பெரியார்.. ஜேம்ஸ் வசந்தன் புதிய தகவல்! பொன்னியின் செல்வன் கல்கியுடன் நட்பு
சென்னை: தந்தை பெரியாருக்கும் பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் கல்கிக்கும் இடையிலான கொள்கை கடந்த நட்பு குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.
சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் இசைக் குழுக்களை கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவரது யூடியூப் பேட்டிகளும் மிகவும் பிரபலம்.

இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தன் தற்போது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அவர் தான் பெரியார். தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார். பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி. முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை.
அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது. அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன் பெரியாரின் வேன் வந்து நின்றது. வந்த பெரியாரை கைபிடித்து அழைத்துச் சென்றார் கல்கி. காலையில் கல்யாணத்திற்கு அய்யா வரலையே. உடம்புக்கு சரியில்லையோ. அதெல்லாம் ஒன்னுமில்லை நல்லாத்தான் இருந்தேன்.
அப்புறம் ஏன் வரலை? வேறொண்ணுமில்லை.. காலையில வந்தேன்னு வையுங்க.. என்னயக் கூட்டிட்டுப்போயி முன்னால உட்கார வெச்சிடுவீங்க. நான் கருப்புச் சட்டையோட இருக்கறதப் பார்த்து ஒங்க வீட்டுப் பொண்ணுக முகம் சுளிக்கலாம். கல்யாணம் நடக்கும் போது கருப்புச் சட்டை போட்டு வந்திருக்கறேன்னு வருத்தப்படலாம்.
அதான் இப்ப வந்திருக்கேன்" என்று பெரியார் சொல்ல நெகிழ்ந்து போனார் கல்கி. புதுமணத் தம்பதிகளுக்கு விபூதி குங்குமம் வைத்து வாழ்த்த பெரியாரை கல்கி கேட்டுக்கொண்டார். பெரியார் மறுக்காமல் செய்தார். இதை கல்கி போட்டோகிராபர் படமாக்கிவிட்டார். இந்தப் படத்தை கல்கி இதழின் அட்டைப்படத்தில் போட கல்கி இதழின் ஆசிரியர் கல்கியிடம் அனுமதி கேட்டார். கல்கி மறுத்துவிட்டார்.
தம் விருப்பத்தை நிறைவேற்றிய பெரியாரை விமர்சனத்திற்கு ஆளாக்க கல்கி விரும்பவில்லை. எதிரெதிர் கொள்கை, விருப்பத்தை மதிக்கும் பண்பு நட்பில் விட்டுக்கொடுக்காமை. இவர்கள்தான் சமூகத்தின் சரித்திரப் பதிவுகள்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications