விஜய் - பாஜக நாடகம்.. ஜனநாயகன் ரிலீஸில் அரசியல் மைலேஜ் தேற்றும் தவெக.. திமுகவினர் சொல்லும் பாயிண்ட்!
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற முடியாததால், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதியே ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற தட்கல் முறையில் விண்ணப்பித்தும், தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கவில்லை என்று ஜனநாயகன் படக்குழுவினர் கொந்தளித்து வருகின்றனர்.
நாளை காலை ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கோரிய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பு ஜனநாயகன் படத்திற்கு சாதகமாக வந்தாலும், படம் ரிலீஸாகப் போவதில்லை. விஜய்யின் கடைசி படம் என்பதால், இது அரசியலாகி இருக்கிறது. சென்சார் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்று சென்சார் தரப்பு கூறினாலும், விஜய் ரசிகர்கள் இது பாஜகவின் செயல் என்று விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது விஜய்யின் அரசியலுக்கு மைலேஜ் கொடுப்பதற்கும், இது திமுகவுக்கு ஆதரவான பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளை விஜய் பக்கம் மடைமாற்றுவதற்கான அமித்ஷாவின் திட்டம் என்றும் திமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பத்திரிகையாளர் செந்தில்வேல், இது பாஜக - தவெக இணைந்து நடத்தும் நாடகம்.
ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக விட்டது.. பகவந்த் கேசரிக்கு சென்சார் கொடுக்க முடியும் என்றால் ஜனநாயகனுக்கும் கொடுக்க முடியும்.. அப்படி இருந்தும் இழுத்தடிப்பது இரண்டு காரணங்களுக்காக. 1. படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று தெரிந்ததும் பலரும் OTT ல் பகவந்த் கேசரி பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இதனால் ஜனநாயகனுக்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லாமல் போனது.. மேலும் அதே சமயத்தில் வெளியாக இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் டிரைலர் ஜனநாயகனை விட அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது... படமாகவும் ஜனநாயகனை விட பராசக்தி அதிக வரவேற்பை பெற்றால் அது முதல்வர் கனவில் வலம் வரும் விஜய்க்கு பெரும் பின்னடைவு.
ஏதாவது செய்து பரபரப்பை அதிகப்படுத்தி விஜய் படத்திற்கு வரவேற்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் படத்திற்கு சென்சார் பிரச்னை, படம் வெளியாகும் போது விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவது என எல்லா நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. 2வது காரணம், இந்த பிரச்னைகளை எல்லாம் திமுகதான் செய்கிறது என்று தற்குறிகளை நம்ப வைத்து திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்துவது..

அதற்கேற்றவாறு சமூக வலைதளங்களிலும் , விவாதங்களிலும் இதற்கு காரணம் திமுக தான் என போலியான கருத்துருவாக்கம் செய்வது.. அதையும் தாண்டி தெளிவாக சிந்தித்து இது பாஜகவின் வேலை என்போரிடம் , பார்த்தீர்களா பாஜக விஜய்க்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்கிறது என அழுது அவர்களின் ஆதரவையும் பெற முயற்சிப்பது என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் சென்சார் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர் திமுகவைச் சேர்ந்தவர் என்று தவெகவினர் பேசி வந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மகன் சாய் லக்ஷ்மிகாந்த், ஜனயாயகன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வாதாட அமர்த்தப்பட்ட சதீஷ் பராசரன் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று வாதாடிய பராசரனின் மகன். இதுல இவனுங்க B team இல்லைனு வேற உருண்டுட்டு இருக்கானுங்க.. தற்குறிகளை வேண்டுமானால் நீங்க milk பண்ணலாம்.. பொது மக்களை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, மற்றொரு திமுக ஆதரவாளர் தனது எக்ஸ் பக்கத்தில், பிரொடியூசர் ஒரு கண்டனம் தெரிவிக்கல, விஜய் ஒரு கண்டனம் தெரிவிக்கல, டைரக்டர் ஒரு கண்டனம் தெரிவிக்கல, படத்துல நடிச்ச நடிகர்கள் கண்டனம் தெரிவிக்கல... இதுல இருந்து என்ன தெரிகிறது... இவனுங்க தான் வேணும்னு சோலோ ரிலீசுக்காக படத்தை செட்டப் பண்ணி தள்ளி போடுறானுங்க.... விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டலன்னு என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசன், விஜய், ஆதவ் அர்ஜீனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், ராஜ் மோகன்....இதுவரைக்கும் ஒருத்தர் கூட 'ஏ! பாசிச பாஜக அரசேனு' ஒரு வார்த்தை வாய் திறந்து பேசல என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் சூர்யா என்ற நபர், படத்துக்குப் பேரு மட்டும் ஜனநாயகன்... ஆனா ரிலீஸ் பண்றதுக்கு டெல்லி வரைக்கும் போய் 'மன்னிப்பு' கேட்க வேண்டிய நிலைமை.

இதான் அமித்ஷா - விஜய் கூட்டணியோட வெற்றியோ? இது 'ஜனநாயகன்' இல்ல, ஒரு 'பயநாயகன்' போட்ட முகமூடி. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி சிம்பதி தேடுறதுக்கு இதைவிட ஒரு நல்ல நாடகம் இருக்க முடியாது.! என்று பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு மூலமாக அரசியல் மைலேஜ் தேற்றி வருவதாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications