மதுரை ஆதீனம் பாடும் நாகூர் அனிபா பாடல்.. திருக்குர்ஆன் வசனங்கள்.. ஜவாஹிருல்லா இரங்கல்
சென்னை : பல இஸ்லாமிய மேடைகளில் சரளமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி அதற்கு விளக்கமும் அளிக்கும் திறன் கொண்டவர். மதுரை ஆதீனம் என அவரது மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வெள்ளிக்கிழமை காலமானார்.
மதுரை ஆதீனம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருணகிரிநாதர் மறைவு
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தொன்மையான புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது.

திருக்குர்ஆன
தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க தனது இறுதி மூச்சுவரை களமாடியவர். பல இஸ்லாமிய மேடைகளில் சரளமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி அதற்கு விளக்கமும் அளிக்கும் திறன் கொண்டவர்.

நாகூர் அனிபாவின் பாடல்
இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் பலருடனும் நெருங்கிய தோழமை பாராட்டியவர். இசைமுரசு நாகூர் அனிபாவின் குடும்ப நண்பராக திகழ்ந்தவர். நாகூர் அனிபாவின் பாடல்களை பல மேடைகளில் பாடி மகிழ்ந்தவர்.. என்னுடனும் கடந்த பல ஆண்டுகளாக நட்புடன் இருந்து அவ்வப்போது உரையாடுவார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மடத்திற்கு சென்ற போது அவர் என் மீது பொழிந்த பாசமலை இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.

ஆன்மீகவாதி
தமிழ் பக்தி இலக்கியங்களை பரப்புவதில் பெருந்தொண்டு ஆற்றியவர். ஆன்மீகவாதிகளில் துணிச்சலாக அரசியல் பணியும் செய்தவர். உலக மதங்கள் குறித்தான தெளிவான பார்வை உடையவர்.

ஜவாஹிருல்லா இரங்கல்
அவரின் இறப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை ஆதீன மடம் அவர் விட்டுச்சென்ற சமூக நல்லிணக்க பணிகளை தொடர்ந்து செய்வதே அருணகிரிநாதருக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications