நாசக்கார திட்டங்களை தமிழகத்தில் திணிக்காதீர்! மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: நாசகர திட்டங்களை தமிழகத்தில் திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி, பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாசகரமான திட்டங்கள்
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் என்ற பாறை எரிவாயு போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு திணித்துவருவது கண்டனத்திற்குரியது. இந்த அபாயகரமான திட்டங்களால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடிவரும் நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குக் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
ஏற்கெனவே உள்ள 30 கிணறுகளில் 21 கிணறுகள் தற்போது வரை அமைக்கப் பட்டுள்ள நிலையில், 9 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால், மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் சூழல் துறையின் அனுமதி கோரியதையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க 2025ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கலாம் என சுற்றுச்சூழல் சூழல் துறை ஒன்றிய அரசிற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஹைட்ரோகார்பன் கிணறுகள்
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக தெரிவித்துள்ளபோதும், காவிரி டெல்டா பகுதி, பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

திரும்பப் பெறுக
தமிழகத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் வாயு போன்ற திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அபாயகரமான திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது மட்டுமின்றி இத்திட்டங்களைத் தமிழகத்தில் திணிக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும் ஒன்றிய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications