ஏற்கனவே ஒன்னு கிழிஞ்சது.. இன்னொரு சட்டையையும் கிழிக்க தயாராகி விட்டார் ஸ்டாலின்.. ஜெயக்குமார்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்னொரு சட்டையை கிழிக்க தயாராகிவிட்டதாகவும், ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்காவிட்டால் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஸ்டாண்ட்டை மீன்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசுகையில், ஏற்கனவே ஒரு சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் வந்ததாகவும், இன்னொரு சட்டையையும் கிழிப்பதற்கு தயாராகிவிட்டார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனறும் கிண்டல் அடித்தார்.
மேலும் விரோதமும் துரோகமும் போல ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்துள்ளதார்கள் என்றும், 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
ஜூன் 3-ஆம் தேதி ஆட்சி மாற்றம் வரும் என துரைமுருகன் கூறியுள்ளாரா என செய்தியாளர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், சொப்பனத்தில் கண்ட அரிசி சோறாகாது என்ற பழமொழிக்கேற்ப துரைமுருகன் பேசுகிறார் என்றும் பணத்தை இழந்த சோகத்தில் துரைமுருகன் பேசிவருவதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
மேலும் , 2021-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அ.தி.மு.க. ஆட்சி இருந்தால் துரைமுருகன் தி.மு.க.வில் இருந்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் விலகத் தயாரா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications