பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பிய மக்களை ‘பொங்க’ வைச்சிட்டீங்களே.. திமுக அரசை விமர்சித்த ஜெயக்குமார்!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் என்பதால், பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜனவரி 14 வரை முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
எனினும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஏராளமானோர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாதவர்களும் ஆயிரக்கணக்கானோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற வந்தனர். அவர்களுக்கு அங்கு பேருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, அங்கிருந்தே அவர்கள் செல்ல பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு.
பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
-
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications