ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மலர் தூவி அஞ்சலி!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
திரைத்துறையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அப்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மறைந்தார்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. முதலமைச்சர் பொறுப்பை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஏற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜானகி ராமச்சந்திரன் அரசியல் களத்தில் இருந்து விலகினார்.
அதன்பிறகு, ஒன்றிணைந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம், காவல் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு-மாடுகள் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
2016 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 2வது முறை வென்று முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இதே நாளில் (டிசம்பர் 5) மறைந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவாயிலின் உள் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இன்று மரியாதை செலுத்தி உள்ளனர். இதையொட்டி நினைவிடம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications