Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாஷ் அவுட்டாகும்" அதிமுக! ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாலின் போட்ட கணக்கு! 4 முகத்துக்கு வினையான ஆறுமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை அதிமுகவில் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையை வைத்து ஆளும் திமுகவும் அரசியல் ரீதியாக சில கணக்குகளை போடுவதால் அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 வருடம்.. ஏகப்பட்ட நீட்டிப்புகள்.. தடங்கல்களுக்கு இடையில் ஒரு வழியாக ஆறுமுகசாமி ஆணையாய் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய இந்த ஆணையம் சில பரிந்துரைகளை மேற்கொண்டு உள்ளது.

அந்த பரிந்துரை.. சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும். ஜெயலலிதாவின் தனி மருத்துவர் கே.எஸ்.சிவகுமார் முறையான தொடக்க சிகிச்சைகளை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளது.

சில சந்தேகங்கள்

சில சந்தேகங்கள்

இந்த அறிக்கை சில சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது. அதாவது அறிக்கை முழுமையாக இல்லை. சசிகலா மீது குற்றம் சாட்டுவதற்கு உண்டான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதை சிலர் கேள்விகளாக வைக்கிறார்கள். இன்னும் சிலர்.. இந்த அறிக்கை விடைகளை கொடுப்பதற்கு பதிலாக இன்னும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. சந்தேகங்களை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் பல சந்தேகங்களைத்தான் இந்த அறிக்கை உருவாக்கி உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக

திமுக

இந்த சந்தேகங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில்தான் ஆளும் திமுக இதை அரசியல் ரீதியாகவும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்கும். அதை தாண்டி அரசியல் ரீதியாகவும் திமுகவிற்கு இந்த அறிக்கை உதவும் என்கிறார்கள். அதன்படி தற்போது இந்த அறிக்கை சசிகலாவிற்கு எதிராக உள்ளது. சசிகலாவை நேரடியாக குற்றஞ்சாட்டுகிறது.

 சசிகலா

சசிகலா

இது மக்கள் இடையே சசிகலாவிற்கு இருக்கும் சிறிய பிம்பத்தையும் உடைத்து போடும். முக்கியமாக ஜெயலலிதாவை அம்மாவாக பார்த்த திமுகவினருக்கு இந்த அறிக்கை கண்டிப்பாக எமோஷனல் ரீதியாக மிகப்பெரிய வலியை கொடுக்கும், பொதுமக்கள் அறிக்கையில் என்ன இருக்கிறது, அதில் குறைகள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். சசிகலாவை குற்றம் செய்தவராக கருதலாம் என்ற பரிந்துரையைத்தான் பார்ப்பார்கள்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அதோடு ஜெயலலிதாவிற்கு சாதாரண வார்டில் ஆபரேஷன் செய்யப்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்பது போன்ற செய்திகள் கண்டிப்பாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கும் அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு மிக்பெரிய "நெகட்டிவ்" இமேஜை கொடுக்கும். அரசியல் ரீதியாக இந்த அறிக்கை சசிகலாவிற்கு இது மிகப்பெரிய புதைகுழி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவருக்கு மட்டுமல்ல இன்னும் சிலருக்கும் இந்த அறிக்கை அரசியல் ரீதியான பாதிப்பைதான் ஏற்படுத்த போகிறது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

சசிகலாவுடன் அப்போது அப்போலோ மருத்துவமனையிலேயே இருந்தவர்கள் டிடிவி தினகரன் மற்றும் விஜயபாஸ்கர் இருவர்தான். ஜெயலலிதா இருந்த மாடிப்பகுதியை முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது விஜயபாஸ்கர்தான். சசிகலா உடன் முக்கிய முடிவுகளில் கூட இருந்தது டிடிவி தினகரன்தான். இவர்கள் இருவருக்கு எதிராகவும் ஜெயலலிதாவின் தீவிர தொண்டர்கள் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆறுமுக அறிக்கையால் பாதிக்கப்பட போகும் 4வது முகம்தான் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி தர்ம யுத்தம் நடத்தினார் என்றாலும். அதே ஓபிஎஸ்தான் தற்போது சசிகலா எந்த தவறும் செய்யவில்லை. அவர் தவறு செய்யவில்லை என்ற உண்மை வெளியே கொண்டு வரதான் விசாரணை கோரினேன். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஓபிஎஸ் கூறி வருகிறார். ஆனால் ஆறுமுக சாமி ஆணையமோ அவரின் கூற்றுக்கு எதிராக சசிகலா மீது குற்றஞ்சாட்டி உள்ளது. சசிகலா தவறு செய்ததாக அந்த ஆணையம் குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆணையம் குற்றச்சாட்டு

ஆணையம் குற்றச்சாட்டு

இது ஓ பன்னீர்செல்வத்தை கூற்றை பொய்யாக்குகிறது. இந்த விஷயங்களும் ஜெயலலிதாவின் தீவிர தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் மீது ஒரு வித அதிருப்தியை ஏற்படுத்தும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் இதை எல்லாம் தடுக்க தவறி விட்டாரே என்ற கேள்வியும் இந்த அறிக்கை காரணமாக எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்த ஆறுமுகசாமி ரிப்போர்ட்.. அதிமுகவில் 4 முக்கியமான தலைகளுக்கு எதிராக திரும்பவும்.. அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை கிட்டத்தட்ட வாஷ் அவுட் செய்யும் ஒன்றாக மாறும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+