ஜெயலலிதா சொன்ன 3 பெயர்கள்.. அது மட்டும் இன்னும் நிறைவேறவில்லை.. பூங்குன்றன் நினைவுகூர்ந்த விஷயம்!
ஜெயலலிதா மூன்று பெயர்களை கொடுத்து நியூமராலஜி எதற்கு சரியாக வருகிறது என்று பார்த்துச் சொல் என்ன தன்னிடம் சொன்னதாக பூங்குன்றன் கூறியுள்ளார்.
சென்னை : "அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதாவின் ஆசை இன்றுவரை நிறைவேறாமல் இருக்கிறது. சைதை துரைசாமி, ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்ற முயல வேண்டும். தொண்டர்களின் பிள்ளைகள், இயலாதவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும்." என மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தன்னிடமும், சைதை துரைசாமியிடமும் சொன்ன விஷயம் குறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தற்போது நினைவுகூர்ந்திருக்கிறார்.
ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டால் அதற்கு என்றும் நான் மாடாய் உழைப்பேன். நாயாய் நன்றி செலுத்துவேன் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

3 பெயர்கள்
இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது. அன்றைய மேயர் சைதை துரைசாமி, ஜெயலலிதாவை சந்தித்தபோது கல்வி அறக்கட்டளை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது என்னை அழைத்த ஜெயலலிதா மூன்று பெயர்களை கொடுத்து நியூமராலஜி எதற்கு சரியாக வருகிறது என்று பார்த்துச் சொல் என்றார். ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னை பார்த்த சைதை துரைசாமி, தம்பி உன்னைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய நண்பர் புலவருடைய மகன் மீது ஜெயலலிதா வைத்திருக்கும் நம்பிக்கை என்னை மனம் குளிரச் செய்கிறது என்றார்.

அறக்கட்டளை
மேலும், ஜெயலலிதா பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அதில் பூங்குன்றனையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மிகப்பெரிய நிதி உதவியை நான் வழங்குகிறேன். உங்கள் இருவர் பெயரில் அது நடக்கட்டும் என்று சொன்னார் என்று மிகுந்த உவகையோடு என்னிடம் தெரிவித்தார். என்னை அழைத்த ஜெயலலிதா இந்த தகவலை என்னிடம் சொல்லி அறக்கட்டளைக்குரிய ஏற்பாடுகளை சைதை துரைசாமி செய்வார். அது குறித்த தகவல்களை அவர் தெரிவித்தால், உடனே என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

சந்தோஷத்தை விட பயமே அதிகம்
எனக்குள், ஜெயலலிதா என் மீது வைத்த நம்பிக்கை சந்தோசத்தை அளித்தாலும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ! என்ற பயமே அதிகமாக இருந்தது. கடைசி மனிதன் இருக்கும் வரை அந்த அறக்கட்டளை செயல்பட வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதாவின் ஆசை இன்றுவரை நிறைவேறாமல் இருக்கிறது. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளையை தொடங்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. அதை பெரிதாக கொண்டு செல்லும் அளவிற்கு வசதியும் என்னிடம் இல்லை.

மாடாய் உழைப்பேன்
எனவே சைதை துரைசாமி, ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்ற முயல வேண்டும். அறக்கட்டளை குறித்த அனுபவம் உங்களுக்கு நிரம்ப உண்டு. மற்றவர்கள் முயற்சி செய்தலும் இனிதே! தொண்டர்களின் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், இயலாதவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். ஜெயலலிதா அவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டால் அதற்கு என்றும் நான் மாடாய் உழைப்பேன். நாயாய் நன்றி செலுத்துவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications