ஜெயலலிதா பாணியில் காய் நகர்த்தல்....உளவுத்துறை பக்கம் கவனம் திருப்பிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

உளவுத்துறை ஒரு ஆட்சியின் கண், காது, மூளை எனலாம். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில் தொய்வு இருந்ததை விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் உளவுத்துறையை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தான். ஆனால் கருணாநிதியின் உளவுத்துறை மேல்மட்ட அளவிலான விஷயங்களை கையிலெடுத்தது. அடிமட்டத்தில் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை போட்ட ஆட்டங்களை கண்காணித்து அளிக்கவில்லை, அல்லது அளிக்கப்பட்டது சரியாக கவனிக்கப்படவில்லை எனலாம்.

Jayalalithas style move .... Chief Minister Stalin turned his attention to the intelligence dept

இதன் விளைவு 2006-11 ஆட்சிக்குப்பின் திமுகவுக்கு பெருமளவில் பாதிப்பு வார்டு அளவிலான கட்சிக்காரர்களாலேயே ஏற்பட்டது எனலாம். உளவுத்துறையை முழுமையாக நம்பியவர் ஜெயலலிதா. எந்த அளவுக்கு என்றால் உளவுத்துறையை டிஜிபி அந்தஸ்து அதிகாரி கவனித்து வந்தபோதும், ஐஜி அந்தஸ்து அதிகாரியிடமும் நேரடியாக தகவலை கேட்டு வாங்கினார்.

டிஜிபி தனக்கு சில விஷயங்களை மறைக்கலாம் என்பதால் இருமுனை உளவுத்தகவல்களை பெற்றார். சில நேரம் ஜூனியர் உளவுப்பிரிவு அதிகாரிகளை நேரில் அழைத்து தகவல்களை கேட்டு வாங்கியதும் உண்டு. இதுதவிர பத்திரிக்கை தகவல்களை வைத்து பலர்மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். எப்போதோ வெளியான புகைப்படம் ரீஷேர் ஆன நிலையில் ஒரு அமைச்சரின் பதவியை பறித்தார்.

Jayalalithas style move .... Chief Minister Stalin turned his attention to the intelligence dept

பெண் தொடர்பு புகாரில் ஒருவர் பதவி பறிபோனது. பல மந்திரிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை திரட்டி விரல் நுனியில் வைத்திருந்தார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் தவிர முன்னாள் டிஜிபி ஒருவரையும் தனியாக இதுபோன்ற தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கொண்டார்.

உளவுத்துறையை அரசியல் கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் பயன்படுத்துவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே மிகுந்த ராஜதந்திரம் மிக்கவர்கள் என்பார்கள். 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியதும், முக்கியமாக தேமுதிகவை திமுகவின் பக்கம் போகாமல் நகர்த்தியதிலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ராஜதந்திரம் உண்டு என்பார்கள்.

தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் செல்வாக்கு மட்டும் போதாது. கூட்டணி மிக முக்கியம். யாருடன் யார் கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்பதை அரசுக்கு உளவுத்துறை அளிக்கும். அதை ஏற்காமல் நடந்தாலும் தேர்தலில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. அப்படி நடந்த முன் கதைகள் உண்டு. அதேப்போன்று எந்தப்பிரச்சினை எந்த நேரம் பெரிதாக எழுகிறது, யாரால் பிரச்சினை என்பதை உளவுத்துறை மோப்பம் பிடித்து அரசுக்கு அனுப்பும்.

அதுபோன்ற நேரங்களில் ஆள்வோர் அதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் அல்லது இருகோடுகள் தத்துவ அடிப்படையில் வேறு ஒரு பெரிய கோட்டை கிழித்து அதை சிறிய கோடாக்கிவிடுவார்கள். சில பிரச்சினைகள் வருவதற்கு முன்னரே உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கைத்தரும் அது அரசியல் நிகழ்வு, போராட்டம், மதக்கலவரம், ஜாதிக்கலவரம், மக்கள் பிரச்சினை என பலவாக இருக்கலாம்.

அதை உணர்ந்து அரசு ஆட்சியை நகர்த்தினால் சிறப்பாக இருக்கும். எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இதில் மிகுந்த திறமை மிக்கவர் என்பார்கள். காரணம் இவர்கள் உளவுத்துறையை மட்டும் நம்பவில்லை. இவர்களுக்கு பல நண்பர்கள் மூத்த எடிட்டர்கள் உண்டு, பல செய்தியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதும் நடக்கும்.

Jayalalithas style move .... Chief Minister Stalin turned his attention to the intelligence dept

கருணாநிதி தினமும் வாக்கிங் போனப்பின்பு அனைத்து நாளிதழ்களையும் வாசிப்பார். பின்னர் அந்தந்த பத்திரிக்கை எடிட்டர்களிடம் தேவைப்பட்டால் பேசுவார். பின்னர் கட்சிக்காரர்கள், அமைச்சர்களுக்கு உடனடியாக உத்தரவு கொடுப்பார். பலர் வாங்கிக்கட்டிக்கொள்வார்கள் என அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள். இது ஆட்சியாளருக்கு அவசியமான பண்பு என்பதால் அவரால் செல்வாக்கு மிக்க ஆளும்மையாக ஆட்சியிலும், கட்சியிலும் இருக்க முடிந்தது.

அடுத்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் தனது இடத்தை தக்க வைக்க போராட வேண்டியிருந்தது. இவரும் உளவுத்துறையை சிறப்பாக பயன்படுத்தினார். அதில் அவர் எடுத்த முடிவுகள் ஆட்சிக்கு அணுகூலமாக இருந்தது. அதனால் தான் வெற்றிப்பெற்ற இடங்கள் குறைவாக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை சரியாமல் காப்பாற்றப்பட்டது எனலாம்.

அடுத்து வந்தவர் அமைதியானவர். அவர் திடீரென அமைதியானதால் அமைச்சர்களே குழம்பிப்போய்த்தான் நிற்கின்றனர். சொல்லி செயலே சிறந்தது என ஆட்சி செய்கிறார். கொரோனா உச்சத்திலிருந்தபோது ஆட்சிப்பொறுப்பேற்ற ஸ்டாலின் நம்பி சில பொறுப்புகளை அமைச்சர்களுக்கு அளித்தார் அது வெற்றியும் பெற்றது.

Jayalalithas style move .... Chief Minister Stalin turned his attention to the intelligence dept

உளவுத்துறையை விட அதிகமாக வல்லுநர்கள் கூறும் விஷயங்களை கையிலெடுத்ததால் கொரோனா, மாணவர்கள் கல்விப்பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றில் அவர் கவனம் செலுத்தி வெற்றிப்பெற முடிந்தது. வல்லுனர்கள் வல்லுனர்கள் தான் அவர்கள் உளவுத்துறையினர் அல்ல என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் திமுக அரசுக்கு எடுத்துக்காட்டியது.

அதில் ஒன்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு விஷயம் வெளியானது. அதில் பெரிதாக ஒன்றும் சிக்காதது. பல அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்தவர்கள் இந்த ஆட்சியிலும் தொடர்வது, தென் மாநிலங்களில் சிறிது சிறிதாக தலைத்தூக்கும் ஜாதிய மதவாத அரசியல், தாதாக்கள் ஆதிக்கம், அதிர்ச்சியூட்டும் விதமாக கட்சி முன்னணியினர் தேவையற்ற தலையீடு அரசுக்கு தலைவலி போன்ற விஷயங்கள் பின்னடைவாக அரசியல் விமர்சகர்களால் வைக்கப்பட்டது.

தேனிலவு காலம் முடிந்தது இனி ஆக்‌ஷன் என எதிர்க்கட்சிகள் களமிறங்க, விசிகவினருடன் போலீஸ் மோதல் என திருமாவளவன் ஆதங்கப்பட பல காட்சிகள் அரங்கேறிவிட்டன. அமைச்சர்கள், கட்சிக்காரர்களை கண்காணிப்பது, கட்சி முன்னணியினர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் தடுப்பது என பல பிரச்சினகள் கவனிக்க வேண்டிய விஷயங்களாக முதல்வர் முன் வைக்கப்பட்டது.

விளைவு உளவுத்துறையை சீர்ப்படுத்த முதல் அடி எடுத்து வைத்துள்ளார் முதல்வர் எனலாம். அரசியல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கவனிக்க என்றுமில்லாத ஒன்றாக கூடுதலாக ஒரு எஸ்.பி அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் அரசியல் விவகாரங்களை அவர் கவனிப்பார் என்பது முக்கியமான ஒன்று. இதன் மூலம் முதற்கட்ட நகர்வாக உளவுத்துறையில் முதல்வர் கவனம் செலுத்தியுள்ளார் என்கிறார்கள். ஆனால் அரசியல் விமர்சகர்கள், சில காவல் உயர் அதிகாரிகளிடம் பேசியபோது இது போதாது, உயர்மட்ட அளவில் உளவுத்துறையில் மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கவனிக்கும் முதல்வர் அதையும் கவனிக்காமலா இருப்பர் என்கின்றனர் திமுக முக்கியஸ்தர்கள்.

உளவுத்துறையின் இந்த மாற்றம் மிக அவசியமானது. மற்ற துறைகளில் நேர்மையான கண்டிப்புமிக்க அதிகாரிகள் இருப்பதைவிட உளவுத்துறைக்கு அப்படிப்பட்ட அதிகாரிகள் நியமனம் அவசியம், தகவல் முறையாக மறைக்கப்படாமல் உள்ளது உள்ளபடி கூடுதலாக பல தகவல்கள் முதல்வர் கவனத்திற்கு செல்லும்போது கட்சி, ஆட்சி இரண்டையும் அவர் சரி செய்ய உதவும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+