Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியே கிடைத்தது. தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக டெபாசிட் இழந்த காங்கிரஸ் தலைவர் என்ற பெருமை 1996 தேர்தலில் குமரி ஆனந்தனுக்குக் கிடைத்தது.

அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சி ஒரே ஆண்டில் (1992) படு தோல்வி அடைந்தது. நிர்வாக சீர்கேடுகள் மலிந்தன. அரசு அதிகாரிகள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பால் விலை உயர்வு; பஸ் கட்டண உயர்வு; மின் கட்டண உயர்வு என விலைவாசி விண்ணை முட்டியது. நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி என்பதை 12 கிலோ எனக் குறைத்தார். அதற்காக வருமானவரி வரம்பைக் குறைத்தார். மக்கள் கொதித்துப் போயினர். 24 நேரத்திற்குள் ஆணை திரும்பப் பெறப்பட்டது.

Jayalalithaa s Mega Corruption in a Single Year DMK Wins 173 Seats Rajini s Massive Impact in 1996

பாமாயில் என்பது தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் மட்டும் கண்களால் பார்க்கும் அரிய பண்டமானது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதித்தனர். மலிவு விலை சாராயக் கடையை மூடியவர், பாண்டிச்சேரி பாணியில் 'பார்'களை திறந்தார். உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மதுக்களுக்கு ஆயத் தீர்வைக் குறைத்த கையோடு, பாட்டில் விலையையும் குறைந்தார். பீர் தொழிற்சாலையைத் தனியாருக்குத் தாரை வார்த்தார்.

மற்றொரு பக்கம் பணக்காரர்கள் கூட அணுகமுடியாத முதல்வராக ஜெயலலிதா உருவெடுத்தார். 9 மாத கால ஆட்சியில் 5 முறை தொழிற்றுறை செயலாளரை மாற்றினார். தேர்தல் அறிக்கையில் ஜெயங்கொண்டத்தில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் திறக்கப்படும் என்றார். கரியும் எடுக்கவில்லை; புதிய தொழிற்சாலைகளின் புகையும் எழவில்லை.

ஆட்டைய போட்ட அரசு நிலங்கள்

தொழிலதிபர் ரானாக் சிங், நைட்ரோ கிளிசரின் தொழிற்சாலையைத் தொடங்க முற்பட்டார். யாரை அணுகுவது? எப்படி அணுகுவது? என்பதில் சுமுகமான நடைமுறைகள் இல்லை. அவர் கர்நாடகா சென்றார். இந்துஜா நிறுவனம் ஆயிரம் மெகாவாட் மின்நிலையம் தொடங்க முயன்றது. இறுதியில் அது ஆந்திரா போனது. சிங்கப்பூர் பிரதமர் லீவான்க்யூ ஒரு பேட்டியில், "இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் முதலீடு செய்யத் தயாராக உள்ளோம்" எனச் சொன்னது பெரிய பின்னடைவு.

ஊழலின் உச்சமாக டான்ஸி சிலத்தை ஜெயலலிதா வாங்கியது பெரிய சட்டச் சிக்கலை உண்டாக்கியது. அரசு பதவியில் உள்ள ஒருவர் அரசு நிலத்தை வாங்கச் சட்டம் அனுமதிக்காது. விதிமுறையை மீறி 54 ஏக்கர் டான்சி நிலத்தை மலிவு விலைக்கு ஜெயலலிதா பங்குதாரராக இருந்த 'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' வாங்கியது. அன்றைய சந்தை மதிப்பு 1 ஏக்கர் 7 லட்சம். ஆக 3.78 கோடிக்கு விற்கவேண்டும். டெண்ட்டர் விடப்பட்டு அதிக விலை கோருபவர்க்கே நிலம் விற்கப்பட்ட வேண்டும். விதியை காற்றில் பறக்கவிட்டார் ஜெ. 'சட்டத்திற்கு உட்பட்டுத்தான் வாங்கினேன்' என்றார்.

மேலும் 'டிட்கோ - ஸ்பிக்' பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகப் புகார். அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மசியவில்லை. கோப்புகளை ஏற்க மறுத்தார். அவர் மீது திராவகம் வீசப்பட்டது. "ஸ்பிக் நிறுவனத்தில் உள்ள தமிழக அரசின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்க ஜெயலலிதா முயன்றார். டிட்கோ தலைவராக இருந்த நான் தடுத்தேன். ஆகவே என் மீது ஆசிட் வீசப்பட்டது. அதன் பின்னணியிலிருந்தவர் ஜெயலலிதாதான்" என்று பேட்டி அளித்தார் சந்திரலேகா.

பின்னர் அரசு பதவியைவிட்டு விலகி அவர் செல்வாக்கே இல்லாத தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆதரவாகச் சுப்பிரமணிய சுவாமி இருந்தார். "திராவிட கட்சிகள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஆகவே ஜனதாவுக்குப் போனேன். அதிகாரத்தில் உள்ள கட்சியில் இணைந்தால் பதவி சுகத்திற்காகப் போய்விட்டேன் என மக்கள் நினைப்பார்கள்" என்று விளக்கம் அளித்தார்.

தன் மீது ஆசிட் வீசிய மூவரைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார் சந்திரலேகா. மூவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சதிச் செயலில் ஈடுபட்ட 'கர்லா' என்பவரை மும்பை போலீஸ் மூலம் மடக்கிப் பிடிக்க வைத்தார் சுப்பிரமணிய சுவாமி. அவரை பிறழ் சாட்சியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சங்கு ஊதிய உலகத் தமிழ் மாநாடு

சந்திரலேகாவைப் போல் ப.சிதம்பரம் மீதும் தாக்குதல் நடத்தினர் அதிமுகவினர். அவர் காவேரி பிரச்சனையில் மாற்றுக் கருத்துச் சொன்னார். மத்திய அமைச்சராக இருந்த அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது அதிமுக.

ஜெயலலிதா 1982 எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட போது கடலூரில் ஆட்சியராக இருந்தவர் சந்திரலேகா. எம்.ஜி.ஆர் மூலம் உண்டான நட்பு பின் அரசியல் ஆலோசனை பெறும் அளவுக்கு ஜெவை இனைத்தது. பின் ஆட்சி அதிகாரம் பெற்ற பின் அவர் மாறிவிட்டார் என்றார் சந்திரலேகா.

இவ்வளவு கொடுமைகளுக்கு மேல் கும்பகோணத்தில் நடந்த மகாமகம் விழாவில் ஜெயலலிதா தன் தோழி சசிகலாவுடன் கலந்துகொண்டு அங்குள்ள குளத்தில் நீராடினார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 48 உயிர்கள் பலியாகின. இந்தச் சோகம் கரும்புள்ளியாக ஆட்சியின் மீது படிந்தது, 'கோயில் நல வாரியம்' அமைத்த ஜெயலலிதா அதில் அதிமுகவினரைப் பதவியில் அமர்த்தினார். அதை ஜெயேந்திரர் கண்டித்தார். அங்கும் முட்டல் உருவானது.

சசிகலாவின் உறவினரான சுதாகரனை ஜெயலலிதா தத்து எடுத்துக் கொண்டு நடத்திய திருமணம் மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. சசிகலாவின் அண்ணன் 37 லட்சம் ரூபாய் செலவில் தஞ்சையில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். திருத்துறைப்பூண்டியில் 1 கோடி செலவில் சசிகலா திருமண மண்டபம் கட்டினார்.

ஜெயலலிதா முதல் தோல்வி

ஹைதராபாத்தில் 18 ஏக்கர் திராட்சைத் தோட்டம் வாங்கினார். அங்குப் பிரம்மாண்ட பங்களா கட்டினார். கிண்டியிலுள்ள வாரப் பத்திரிகை சொந்தமான இடத்தை வாங்கினார். யாவும் சர்ச்சையானது.

தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பல போதாமைகள் இருந்தன. இலங்கையிலிருந்து வந்த தமிழறிஞர்கள் திரும்ப அனுப்பப்பட்டன. விழாவைத் துவங்க ஒரு குத்துவிளக்கு கூட இல்லை. தஞ்சை முழுக்க ஜெயலலிதாவின் கட் அவுட்கள் மட்டுமே இருந்தன. தமிழறிஞர்களின் படங்கள் ஒப்புக்கும் இடம்பெறவில்லை. இதற்காக 100 கோடி செலவழிக்கப்பட்டது.

1991இல் நடந்த தேர்தலில் 'வென்றால் அண்ணா வழி; தோற்றால் பெரியார் வழி' என்றார் கருணாநிதி. எந்த ராஜீவ் படுகொலையால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இந்தியத் தேசிய காங்கிரஸ் இருந்ததோ, அதே கட்சி 1996இல் ஜெயலலிதா ஊழல் பிரச்சனையால் இரண்டாக உடைந்தது. மூப்பனார் தலைமையில் உள்ளவர்களே உண்மையான காங்கிரஸ் என்றனர். சூழலை அறிந்தே கருணாநிதி, 'காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்' என்றார். அவர் திட்டப்படி காங்கிரஸ் உடைந்தது.

96 தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்த தொகுதிகள் மிகமிகச் சொற்பம். 4 சீட்டுகள்தான். அதாவது 1991 ராஜீவ் கொலையால் திமுக 2 தொகுதியில் சுருண்டது. ஜெயலலிதா சொந்தக் காசில் வைத்துக் கொண்ட அதிகார துஷ்பிரயோகம் என்னும் சூனியத்தால் இம்முறை 4 இல் முடங்கியது. 91இல் கருணாநிதி, ராஜீவ் அலையை மீறி வென்றார். ஜெயலலிதா இந்த முறை பர்கூரில் 50,782 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியுற்றார். திமுக 173 தொகுதிகளில் வென்றது. தமிழ் மாநில காங்கிரஸ் 39 தொகுதிகளில் வென்றது.

நாடாளுமன்றத்தில் 39 இடங்களையும் திமுக- தமாகா கூட்டணி வென்றது. அதற்குக் காரணம், ரஜினி அலை. அவர் ஜெயலலிதாவின் ஊழலைக் கண்டு வெகுண்டு எழுந்து, 'மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது' என்றார். அவர் 'அண்ணாமலை' படத்தில் பயன்படுத்திய சைக்கிள் சின்னமே தமாகாவுக்கு கிடைத்தது. சுவரொட்டிகளில் ரஜினியே ஒளிர்ந்தார். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசுக்கு 1 தொகுதியே கிடைத்தது. தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக டெபாசிட் இழந்த காங்கிரஸ் தலைவர் என்ற பெருமை குமரி ஆனந்தனுக்குக் கிடைத்தது.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+