தனியா தான் வந்தாங்க.. ஹாலில் நுழைந்ததுமே! ஜாலியாக சுற்றும் ரவி மோகன் - கெனிஷா! அடுத்த வாரம் ட்விஸ்ட்
சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அடுத்த வாரம் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி, விவாகரத்து வழக்கு நீதிமன்ற தீர்ப்பு என பரபரப்பாக சென்று கொண்டிருந்தாலும் ரவி மோகனும் கெனிஷாவும் மீண்டும் பொது இடங்களில் தென்பட தொடங்கியுள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக பங்கேற்று இருக்கின்றனர். தனித்தனி காரில் வந்தவர்கள் நிகழ்ச்சியில் ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காத மிகச் சில நாயகர்களில் ஒருவர் ரவி மோகன். எடிட்டர் மோகனின் மகனான அவர், அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து பிற இயக்குனர்களின் படங்களின் நடிக்காமல் அண்ணனின் இயக்கத்திலேயே சில படங்களில் நடித்த நிலையில், அவை வெற்றியும் பெற்றன.
அதற்குப் பிறகு பிற இயக்குனர்களுடன் பணியாற்றத் தொடங்கினார். சாக்லேட் பாய் இமேஜை உடைக்க சில அதிரடி ஆக்சன் படங்களிலும் நடித்தார். பேராண்மை, தனி ஒருவன் போன்ற வித்தியாச கதைக்களங்கள் அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது.

இந்நிலையில், சிறு வயது முதல் தனக்கு தோழியாக இருந்த ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமுகமாக சென்று கொண்டிருந்த ஜெயம் ரவியின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுதான் புயல் வீசியது. திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் ஜெயம் ரவி. செலவுக்கு கூட பணம் தருவதில்லை, தன்னை ஒரு அடிமை போல நடத்துகிறார் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதை அடுத்து தனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி தன்னை பிரிவதாக அறிவித்திருப்பதாக ஆர்த்தி கூறியதோடு தன் மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி பழக்கத்தில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஆர்த்தியை பிரிவதாக கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் எனவும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு சுதந்திரம் தர வேண்டும் என ஜெயம் ரவியும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக தர வேண்டும் என ஆர்த்தி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை இந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே ரவி மோகன், ஆர்த்தி ரவி, கெனிஷா, ஆர்த்தியின் தாயார் என அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டனர்.
இதனால் இவர்களைப் பற்றிய செய்தியே ஊடகங்களில் ஆக்கிரமித்தது. இந்த நிலையில் தன்னைப் பற்றி அறிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளை நீக்க வேண்டுமென ரவி மோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, யாருமே அறிக்கை வெளியிட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பிறகு தான் அறிக்கை போர் ஓய்ந்தது. இடையில் தன்னைக் குறித்து அவதூறாக ஆபாசமான கருத்துக்கள் பகிரப்படுவதாகவும் மிரட்டல்கள் வருவதாகவும் ஜெனிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்படியாக பரபரப்பாக நிகழ்வுகள் சென்று கொண்டிருக்க மீண்டும், ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு இருக்கின்றனர் ரவி மோகனும் கெனிஷாவும்.. கடைசியாக பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்ட நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னையில் சந்தித்துள்ளனர். சதர்ன் பிரீமியர் லீக் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தான் இருவரும் பங்கேற்றுள்ளனர். இந்த முறை இருவரும் தனித் தனி காரில் தான் நிகழ்ச்சிக்கு வந்தாலும், நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி உள்ளனர். பின்னர் தனி தனியே காரில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்களை சந்திப்பின் போதும், கெனிஷா மற்றும் தனிப்பட்ட செய்திகள் குறித்து பேச வேண்டாம் என ஜெயம் ரவி தவிர்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications