ஆர்த்திக்கு ஆசையில்லை பேராசை! 40 லட்சம் அவருக்கு மட்டுமாம்! மகன்களை ரவி மோகன் தான் பார்த்துக்கனுமாம்
சென்னை: பிரபல நடிகரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி கூடுதல் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 40 லட்சம் ரூபாய் தனக்கு மட்டுமே எனவும், தனது இரு மைனர் மகன்களை ரவி மோகன் தான் பராமரிக்க வேண்டும் என மனுவில் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருபவர் ஜெயம் ரவி என்ற ரவி மோகன். 2003இல் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் 1993 ஆம் ஆண்டு பாவா பவமரிடி என்ற தெலுங்கு படத்தின் மூலமே குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் நல்ல பிள்ளையாக சினிமாத்துறையில் இருந்தவர் ரவி மோகன் என்றால் அது மிகையாகாது. தொடர்ந்து ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட ரவி, அவரது மாமியாரின் தயாரிப்பில் சில படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் பிரச்சனையே வந்தது.

தொடர்ந்து தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் டாக்சிக் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டிய ரவி மோகன், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜெயம் ரவியின் குற்றச்சாட்டுகளை மறுத்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு பழக்கம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவருமே அது தொடர்பாக பேசவில்லை. சர்ச்சை பெரிதானதை அடுத்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என ஜெயம் ரவி கேட்டுக்கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க ஐசரி கணேஷ் இல்ல நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, கெனிஷாவுடன் கலந்து கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்த்தி, கெனிஷா, ரவி, அவரது மாமியார் என தொடர்ந்து அறிக்கை போரில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது ரவி மோகன் ஆர்த்தி ஆகியோர் ஆஜராகினர். அப்போது தன்னால் ஆர்த்தியுடன் வாழவே முடியாது, விவாகரத்து வழங்க வேண்டும் என ஆணித்தரமாக ரவி மோகன் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விவாகரத்து வழங்கினால் தனக்கு 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதற்கு ரவி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வழக்கை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி. இந்த நிலையில் ஆர்த்தி தாக்கல் செய்த மனுவின் சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. அதாவது 40 லட்சம் ரூபாயை தனக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும், தனது இரு மைனர் மகன்களையும் ரவி மோகனே பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாதம் பத்தாம் தேதிக்குள் அந்த பணத்தை வழங்க வேண்டும் என ஆர்த்தி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications