தமிழக அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்.. திடீரென விருப்ப ஓய்வு.. என்ன காரணம்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் அவரது ஆட்சி காலத்தில் கூடுதல் செயலாளராகவும் இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரது பணிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், தற்போது அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் பின்னர் தற்போது சமூக நலத்துறை செயலாளராக உள்ளார். முதல்வரின் கனவு திட்டமான காலை உணவு திட்டத்தில் செயல்படுத்தியதில் இவரது பங்களிப்பும் இடம் பெற்று இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது, செல்வாக்கு மிக்க நபராக அதிகாரிகள் மத்தியில் அறியப்பட்ட ஜெயஸ்ரீ முரளிதரன், தற்போது திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நலத்துறை செயலாளர்
தமிழக அரசின் சமூக நலத்துறையில் செயலாளாராக இருந்து வருபவர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன். 2002 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற இவர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக திருச்சி மாவட்ட ஆட்சியராக ஜெயஸ்ரீ இருந்த போது அப்போது அந்த மாவட்டத்திற்கு உட்பட ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஜெயலலிதா கொண்டு வந்த பல திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்றார் ஜெயஸ்ரீ. அதன்பிறகு ஜெயலலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்ற ஜெயஸ்ரீ முரளிதரன் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளராக ஜெயஸ்ரீ பணியாற்றி இருந்தார்.
காலை உணவு திட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், டிட்டோ இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய இவர் முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார். காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கான உணவுப்பட்டியலை தயாரித்தது இவரே ஆவார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பை வகித்தவரான ஜெயஸ்ரீ முரளிதரன், பதவி காலம் வரும் 2027 ஜனவரி மாதம் வரை உள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ள நிலையில் திடீரெனெ விருப்ப ஓய்வில் செல்ல ஜெயஸ்ரீ முரளிதரன் முடிவு செய்துள்ளார். அவரது விருப்ப ஓய்வு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் (நேற்று) விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஜெயஸ்ரீ முரளிதரன் டிவிஎஸ் குழுமத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க இருப்பதாக கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications