மின்னல் வேகம்.. கோவில்பட்டி, பொள்ளாச்சியில் ஜியோ 5ஜி இன்று முதல் அறிமுகம்..பயன்படுத்துவது எப்படி?
5ஜி சேவையின் தொடக்க ஆஃபராக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps+ வேகத்தில் அளவில்லாத இணைய சேவை கூடுதல் கட்டணம் இன்றி வழங்க உள்ளது.
சென்னை: இந்தியா முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் முனைப்பில் ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது படிப்படியாக ஒவ்வொரு நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகியவற்றில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடக்க ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதோடு இந்த 5ஜி சேவையை மக்கள் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இணைய சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு முதல் 5ஜி சேவைக்கான அனைத்து சோதனைகளும் முடிவடைந்து அறிமுகம் செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் முதலாக நாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவை பொறுத்தமட்டில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.

5ஜி சேவை அறிமுகம்
ஜியோ சார்பில் ட்ரூ 5ஜி இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 304 நகரங்களில் ஜியோ சார்பில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், கிருஷ்ணிகிரி மாவட்டம் ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது.

2 நகரங்களில் இன்று அறிமுகம்
இந்நிலையில் தான் ஹோலி பண்டிகையையொட்டி இன்று நாடு முழுவதும் 27 நகரங்களில் புதிதாக 5ஜி சேவையை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை மக்கள் இன்று முதல் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவது எப்படி?
தொடக்க ஆஃபராக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps+ வேகத்தில் அளவில்லாத இணையச் சேவை கூடுதல் கட்டணம் இன்றி வழங்க உள்ளது. இந்த சேவையை பெற விரும்பும் மக்கள் 5ஜி வசதி கொண்ட செல்போன் பயன்படுத்தினால் மட்டுமே போதும். தற்போதைய ஜியோ சிம் மூலம் 5ஜி சேவையை பெற முடியும். 5ஜி சேவைக்காக ஜியோ சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என ஜியோ சார்பில் கூறப்பட்டுள்ளது.

331 நகரங்களில் 5ஜி சேவை
இதுகுறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛நாட்டில் இன்று 13 மாநிலங்களில் 27 இடங்களில் ஜியோ 5ஜி சர்வீஸ் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் 331 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை கிடைக்கிறது. 2023 டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஜியோவில் 5 ஜி சேவையை வழங்குவதை இலக்காக வைத்துச் செயல்படுகிறோம்'' என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications