திமுக சிறுபான்மையினர் அணியில் பதவி வாங்க தீவிரம்! அறிவாலயத்தை சுற்றி வரும் ஜே.எம்.பஷீர்!
சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவில் பதவி வாங்குவதற்காக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் ஜே.எம்.பஷீர்.
அதிமுகவில் சிறுபான்மையினர் அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்த இவர், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசி கடுமையாக விமர்சித்ததால் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு அணுசரனையாக இருப்பார் என எதிர்பார்த்த இவருக்கு அவரது நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட இவர், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவில் செயலாற்றி வருகிறார்.
இதனிடையே அண்மையில் வெளியான திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் ஜே.எம்.பஷீரின் பெயர் இடம் பெறாத நிலையில், கடும் ஏமாற்றம் அடைந்த அவர் மனம் தளராமல் ஏதேனும் ஒரு பதவியை வாங்கிவிட அறிவாலயத்தை சுற்றி வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் 2 அமைச்சர்கள் இதற்காக அடிக்கடி சந்தித்துப் பேசும் இவர், முதல்வரிடத்தில் தனக்காக அவர்களை பரிந்துரை செய்யும் படி நச்சரித்து வருகிறார்.

தேசியத் தலைவர் என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்மாவட்டங்களில் ஓரளவு பரிச்சயம் பெற்றிருக்கிறார் ஜே.எம்.பஷீர்.
திமுக சிறுபான்மையினர் அணியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஜே.எம்.பஷீர், அந்த அணி சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் முதல் ஆளாக கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறுபான்மையினர் நல ஆணையம் தொடர்பான விவகாரங்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications