கொஞ்சமாவது காமன்சென்ஸ் இருக்கா.. விஜய்யின் புதுச்சேரி விசிட்.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்
சென்னை: தமிழ்நாடு அரசியலை போல தவெக புதுச்சேரியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி விஜய் புதுச்சேரி செல்ல உள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டின், கொஞ்சமாவது காமன் சென்ஸ் இருக்கிறதா. குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள். என்று தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கி தேர்தல் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். தமிழ்நாட்டுடன், புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவும் புதுச்சேரியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விஜய் புதுச்சேரி விசிட்
புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறை ரோட்ஷோ நடத்த அனுமதி மறுத்துவிட்டது. ஆனாலும் தவெக தரப்பில் தொடர்ந்து ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள். தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும் புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் ஆதவ் அர்ஜுனா மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். பாஜகவில் ஆக்டிவாக இருந்த ஜோஸ் சார்லஸ், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்றும், தவெக வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெக ஆதவ் மற்றும் ஆனந்த் மீது அவர் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.
காமன்சென்ஸ் இருக்கா
இந்நிலையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் தான் புஸ்ஸி. ஆதவ் அர்ஜுனா இருவரும் புதுச்சேரியில் தான் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தை விட புதுச்சேரியில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அங்கு என்ன செய்யவதென்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருந்தால் இங்கு கோட்டைவிட்டு விடுவார்கள். புதுச்சேரியில் ரோட்ஷோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது காமன் சென்ஸ் இருக்கிறதா. குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள். புதுச்சேரியில் இருப்பது திறந்தவெளி சாக்கடை திட்டம். அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பாவது. ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பலியாகியுள்ளனர்.
ஊரைவிட்டு ஒளிந்து
அதன் பிறகு ஊரைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்படியிருந்தும் மீண்டும் ரோட்ஷோ கேட்கின்றனர். இந்த நேரத்தில் ரோட்ஷோ வேண்டுமா என்பதை அவர்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கட்சி தலைவர் மக்களுக்கு எது நல்லது என்று யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
நான் கட்சி ஆரம்பித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். எனவே விஜய் புதுச்சேரி வரும்போது அவரை சந்திக்க திட்டமில்லை. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியினருடன் கலந்து பேசி முடிவு செய்வோம். எங்கள் சிந்தனைகளுடன் ஒன்றுபடுவோருடன் கூட்டணி அமைப்போம். அப்படி இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்." என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications