இது ராகுலின் மருமகள்.. பாஜகவின் அழுகிப்போன கேவலமான மனநிலை! நிர்மலை வருத்தெடுத்த ஜோதிமணி
சென்னை: பிரியங்கா காந்தியின் மகள் ராகுல் காந்தி அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து கருத்திட்டு பாஜக நிர்வாகி நிர்மல் குமாரை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 11 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பயண விபரம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கேரளாவில் யாத்திரை
இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணம் குறித்த செய்திகள் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கின்றன.

பாஜக நிர்மல் குமார்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டரில் ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. " என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஜோதிமணி
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "இந்த புகைப்படத்தில் இருப்பவர் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி அவர்களின் மகள் மிரயா. இது பாஜகவின் அழுகிப்போன கேவலமான மனநிலையை காட்டுகிறது. நடைபயணத்தின் மகத்தான வெற்றிகண்டு பாஜக அச்சமடைந்திருக்கிறது.. நாங்கள் அன்பை தைக்கிறோம். பாஜக அறுவெறுப்பை,வெறுப்பை விதைக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications