ஜோதிமணி தந்த ரிப்போர்ட்.. எடப்பாடி கட்டி வச்ச கோட்டை சுக்குநூறாக உடைஞ்சிடுச்சே.. என்னங்க நடக்குது?
சென்னை: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கொடுத்த ரிப்போர்ட் ஒன்றின் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கனவு கலைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம். அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை : இப்போது திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுள்ளதால்.. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பெரிய விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைத்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
வைகை செல்வேன்: சமீபத்தில் கூட எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு வைகைச் செல்வன் அளித்த பேட்டியில், திமுக உடனான காங்கிரஸின் கூட்டணி கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக, நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேட்டி அளித்தார். வைகைச் செல்வன் அளித்த பதிலால், அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? காங்கிரசை உள்ளே இழுக்க அதிமுக முயல்கிறதோ என கேள்வி எழுந்துள்ளது
இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கொடுத்த ரிப்போர்ட் ஒன்றின் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கனவு கலைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ரவீந்திரன் துரைசாமி:ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில், திமுக கூட்டணி வெற்றிபெற்ற கூட்டணி. அந்த கூட்டணி உடையாது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி கூட்டணி. அது பிரிந்துதான் இருக்கும். அது உடைந்துதான் போகும். காங்கிரஸ் - திமுக உறவு வலிமையாக உள்ளது. அவர்கள் கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. அந்த அணி உடைய வாய்ப்பே இல்லை. ஆனால் அதிமுக அணி உடைந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி இன்னும் பலத்தை நிரூபிக்கவில்லை. அவர் பலத்தை நிரூபிக்காத வரை அவருடன் யாரும் கரம் சேர மாட்டார்கள் . கொங்கு மண்டலத்தில் கூட லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சறுக்கிவிட்டார் . கொங்கிலேயே மற்ற ஜாதியினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். பல சமூக இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர்.
ஜோதிமணி, திருநாவுக்கரசர் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அதில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வைத்தால் வெற்றிபெறாது என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி சேர கூடாது என்று கூறிவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் கனவு கலைந்துவிட்டது.
இதனால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு குறைவு. ராகுல் ஸ்டாலின் இடையே நல்ல உறவு உள்ளது. திமுக செல்வப்பெருந்தகை இடையிலும் நல்ல உறவு உள்ளது. இதனால் அது உடைய வாய்ப்பே இல்லை, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications