ராணுவத் தளபதி பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்! சர்வாதிகார ஆட்சிக்கு அறிகுறியா? ஷ்யாம் விளாசல்
பிரதமர் நரேந்திர மோடி அரசு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளது. அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை நியமிப்பதற்குப் பதிலாக இவரின் பணி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வயதில் மூத்தவர் அடிப்படையில்தான் பதவி வழங்கப்படும்.
துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை வயது அடிப்படையில் நியமித்து இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளது.

முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷா 6 மாத காலம் ராணுவத் தளபதியாக இருந்தபோது 1975ல் கடைசியாக இதுபோன்ற நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஜெனரல் பாண்டேவுக்கு வழங்கப்பட்ட இந்த நீட்டிப்பு அசாதாரணமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த பதினைந்து நாட்களில் புதிய அரசு பதவியேற்கும் நிலையில் இந்த நீட்டிப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவத் தளபதியை நியமிப்பதில் அரசாங்கம் வெறும் சீனியாரிட்டி மட்டுமே இத்தனை காலம் அடிப்படையாக வைத்து இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி சீனியாரிட்டியை அடிப்படையாக வைக்காமல் திடீரென பதவி நீட்டிப்பு செய்தது பல விதமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மோடி அரசின் இந்த நடவடிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
இந்தச் சர்ச்சை பற்றிப் பேசிய ஷ்யாம், "அரசின் இந்தச் செயலை ஆச்சரியகரமான நகர்வு என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டபோது 3 ஆண்டுகள் அல்லது 62 வயதுவரை என்ற விதியின் படிதான் வழங்கப்பட்டது. அவருக்கு 62 வயதாகிவிட்டது. அவர் மே மாதத்துடன் ஓய்வு பெறவேண்டும்.

வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும்போது அடுத்தவருக்குக் கூடுதல் பொறுப்பு தருவார்கள். அல்லது உடனடியாக புதியவரை நியமிப்பார்கள். ஆனால், இப்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை விதிகள் உள்ளபோது பதவி நீட்டிப்பு வழங்குவது சட்ட விரோதம். அப்படி வழங்கக் கூடாது.
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சிக்கு முன்பாக இதைப் போன்று ஒரு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இப்படி நடந்ததே இல்லை.
இப்படிப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால் இரண்டு மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒருவர் பெயர், ஏகே சிங், மற்றொருவர் உபேந்திர திரிவேதி.
கடந்த 2022இல் மனோஜ் பாண்டேவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்ட போதே சர்ச்சை எழுந்தது. இவர் ராணுவத்தில் பொறியாளர் பிரிவிலிருந்தவர். பொதுவாக இந்தப் பிரிவில் இருப்பவரை சிஒஏஎஸ் பதவி தரப்படுவதில்லை. அதை மீறி இவருக்குப் பதவி கொடுக்கப்பட்டது.
இவரது பதவிக்காலம் முடிவடைவது அரசுக்கு முன்பே தெரியும். ஆகவே தேர்தலுக்கு முன்பே ஒருவரைப் பொறுப்பாகப் பதவியில் அமர்த்தி இருக்கலாம். புதிய அரசு பதவியேற்றதும்தான் அதற்கான அதிகாரியை நியமிக்க முடியும். ஆகவே, இதைச் செய்திருக்கலாம்.

ராணுவச் சட்டம் 16ஏ 4 பிரிவின் கீழ்தான் இந்தப் பதவி நியமனம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவின்படி நியமனம் நடக்கும். ஆனால், அப்படி நடப்பதில்லை. பிரதமர் எடுக்கும் முடிவின்படியே இந்தப் பதவி நியமனம் நடைபெறுகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.
ஏற்கெனவே சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி தோல்வியடைந்தாலும் அவரை எளிதாக வெளியேற்றிவிட முடியாது. அவரின் தாக்கம் சில ஆண்டுகள் வரை இருக்கும் என்று ஒரு கருத்து வலுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த ஊகத்திற்கு வலு சேர்க்கும்படி இந்த நடவடிக்கை இருக்கிறது.
இதற்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் செய்வார்கள். ஏற்கெனவே பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அந்தத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று சொல்லி இருக்கிறது.
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்தையே பாஜக தனது வசதிக்கு ஏற்ற மாதிரி வளைத்துவிட்டது. அக்னிபாத் திட்டத்தை எந்தக் குழு பரிந்துரைத்து? அப்படியான ஒரு திட்டத்தை முன்வைத்து யார் ? என்பது எல்லாம் மிகப்பெரிய கேள்வி.
ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே ராணுவ திட்டம் இடம்பெறுவது சின்ன விசயம் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் திட்டமாக இருப்பதால்தான் அப்படி அறிவிக்கிறது காங்கிரஸ்.
மோடி எளிதாக எல்லாம் இந்தியாவின் ஜனநாயகத்தை மாற்றிவிட முடியாது. உலகில் ஒரு பகுதிதான் இந்தியா. எனவே மற்ற நாடுகள் அவ்வளவு அமைதியாக இருக்க மாட்டார்கள்.
முன்பே இந்திரா காந்தி இதற்கு முயன்று தோற்றுப் போனார். ரேபரேலி தொகுதியிலேயே அவரும் தோற்றார். இது வரலாறு. நமது நாடே சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஒருவர் செய்தால், அதை உலகம் ஏற்காது.

உலகம் ஏற்காத போது இந்தியா எப்படிப் பிழைக்க முடியும்? பல நாடுகளுடன் வர்த்தகம் நடக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி நடக்கிறது. ஆகவே எளிதாக இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க முடியாது.
ராணுவ ஒழுக்கம் என்பது அரசில் ஒழுக்கத்தைவிட உயர்வானது. அதை நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவர் ஓய்வு பெறுகிறார் என்றால், அதே பதவிக்கு ஒருவரை இடைக்கால பொறுப்பில் நியமிப்பதில் என்ன பிரச்சினை வரப் போகிறது? இதுதான் ஜனநாயகமா? இது நல்லதா?
உச்சபட்சமான அமைப்புகளான தேர்தல் ஆணையம், ராணுவம் போன்றவை மீது சந்தேகம் வரும்படி ஏன் பிரதமர் மோடி நடந்துகொள்ள வேண்டும்? ஏற்கெனவே அக்னிபாத் திட்டம் உபி, பீகாரில் தான் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டும், ராணுவ தளபதி விவகாரம் சர்ச்சையானால் யார் ஓட்டுப் பாதிக்கும்? பீகாரிலும் உபியிலும் பாஜக ஓட்டு வங்கிதான் பாதிக்கும்?" என்கிறார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications