"குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும்" பலமுறை தாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய்கிரிஸில்டா பரபர புகார்
சென்னை: நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி, கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் எனது கணவர், நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவர்தான் அப்பா, அவருடன் கடைசியாக பேச முயற்சித்தபோது தன்னை தாக்கினார் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தொடர்பில் இல்லை. எனக்கும், எனது குழந்தைக்காகவும் நான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதனால் அவர் இந்த குழந்தைக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.

முறைப்படி என்னை திருமணம் செய்து கொண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அப்பார்ட்மென்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஜூடிசியல் செப்பரேஷனில் இருப்பதாக கூறினார். அதனை நம்பி தான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்தேன். ஒன்றரை மாதமாக அவருடன் எந்தவொரு தொடர்பிலும் நான் இல்லை. கோவிலில் எங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.
தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இப்போது நான் தொடர்பில் இல்லை. 7 மாத கர்ப்பிணியாக தற்போது உள்ளேன். திடீரென என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த குழந்தக்கும், எனக்கும் பதில் வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளேன்.
மாதம்பட்டி ரங்கராஜை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால், அவரிடம் என்னை பேச விடாமல் தடுக்கின்றனர். பேச விடாமல் தடுப்பது அவருடைய நண்பர்கள், தம்பி, குடும்பத்தினராக இருக்கலாம். நான் மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ வேண்டும். இந்த குழந்தைக்கு அவர் அப்பா. அதனை மட்டும் தான் நான் புகாராக தெரிவித்துள்ளேன்.
புகைப்படம் வெளியிட்டது குறித்த கேள்விக்கு, மாதம்பட்டி ரங்கராஜ் தொழிலில் இருக்கிறார். அவருடைய அப்பா, அம்மா எங்களது திருமணம் குறித்து வெளியில் தெரிய வேண்டாம் என்று கூறியிருந்தனர். அதனால் நாங்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது சில உண்மைகள் தெரியவந்துள்ளதால், எனது குழந்தைக்காக நான் போராடி வருகிறேன். எனக்காக நான் போராடவில்லை. என்னுடைய குழந்தைக்காகத்தான் இப்போதும் போராடுகிறேன். குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே என்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலும், தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தும் என்னை தாக்கியுள்ளார். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் என்னிடம் பேசவில்லை. கடைசியில் அந்தப் பேச்சுவார்த்தை தாக்குதலில் தான் முடிந்தது. நான் அவருடன் கடைசியாக பேச முயற்சித்தபோது அவர் எல்லார் முன்பும் சேர்ந்து என்னை தாக்கினார்.
அவர் என்னுடன் பேச தயாராக இல்லை என்றும், அவருடன் இருப்பவர்கள் என்னிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளதாகவும் கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் எனது கணவர். என் வயிற்றில் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அது மட்டும்தான் எனது கோரிக்கை என்று கூறிச் சென்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications