வெறும் 7 நிமிஷம்.. அடுத்த ஆச்சரியத்தை கிளப்பிய சென்னை மெட்ரோ.. ஒரே நாளில் வாயை பிளந்த சென்னைவாசிகள்
சென்னை: திடுதிப்பென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை சாதித்தும் காட்டியிருக்கிறது சென்னை மெட்ரோ நிறுவனம்.. இந்த நடைமுறையானது, பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. நெருக்கி தள்ளும் போக்குவரத்து பிரச்சினைக்கு, இந்த மெட்ரோவின் வருகையும், சேவையும் மிகப்பெரிய நிம்மதியை பயணிகளுக்கு தந்து வருகிறது.
இப்போதைக்கு சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடம் உள்ளது. சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகிறது.

மெட்ரோ நிறுவனம்: இந்த சேவை காரணமாக, சென்னை மக்களும், மெட்ரோ ரயிலை நாடி வருகிறார்கள். இதனால், தேவையும் அதிகரித்து வருகிறது.. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணித்து அசத்தியிருந்தார்கள்.. அதனால்தான், பயணிகளின் வசதிக்காகவே, பல்வேறு அதிரடிகளை மெட்ரோ நிறுவனம் அவ்வப்போது அறிவித்து வருகிறது.
ஏற்கனவே, பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், பேடிஎம் ஆப்பில் டிக்கெட் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.. பிறகு, சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பையும் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது.
சிறப்பு அறிவிப்பு: கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி கொண்டுவரப்பட்டது. இதோ இப்போதும் ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.. நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சொன்னதுமே, சென்னைவாசிகள் ஆச்சரியமடைந்தனர்.. வழக்கமாக, 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதெப்படி 7 நிமிடம் சாத்தியமாகும்? என்று வியந்து கேட்டனர்.
ஆச்சரியம்: ஆனால், நேற்று முதல் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்து, சாதித்தும் காட்டியது சென்னை மெட்ரோ.. சென்னை விம்கோ நகர், விமான நிலையம் போன்ற பகுதிகளில் மெட்ரோ சேவையானது 7 நிமிடங்களில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததுடன், இதனால், வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications