அமித் ஷா கேட்ட கேள்வி! அவ்ளோதான்.. அடுத்தடுத்த ஆக்சனில் குதித்த அண்ணாமலை.. டெல்லி தந்த ப்ரீ ஹேண்ட்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் வரும் நாட்களில் முக்கிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றங்கள் இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு வந்து இருந்தார். புதுச்சேரிக்கு செல்லும் முன் சென்னையில் ஓர் இரவு அமித் ஷா தங்கி இருந்தார்.
அமித் ஷா சென்னையில் தங்கி இருக்கும் போது பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார்.

அமித் ஷா
இரவு நீண்ட நேரம் ஆலோசனை செய்த அமித் ஷா.. தமிழ்நாட்டில் திமுக பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறாராம். அதோடு அதிமுக உடன் கூட்டணி இருப்பது குறித்தும் அமித் ஷா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதெல்லாம் போக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் அமித் ஷா ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் பாஜகவிற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் ஏன் செய்யப்படவில்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறாராம்.

உறுப்பினர் நியமனம்
புதிய தலைவர் வந்த பின் பொதுவாக நிர்வாகிகள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் பாஜகவில் மாநில பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மற்ற நிர்வாகிகளும் மாற்றப்படவில்லை. இதை பற்றி அமித் ஷா கேட்டு இருக்கிறாராம். என்ன பிரச்சனை.. என்று விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிக்கு அண்ணாமலை முன்பே லிஸ்ட் ஒன்றை தயார் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மாற்றம் சகஜம்
இந்த லிஸ்ட் ஏற்கனவே டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருந்ததாம். ஆனால் சீனியர்கள் சிலர் எதிர்ப்பு காரணமாக இதை இறுதி செய்வதில் பிரச்சனை நிலவி இருக்கிறதாம். இந்த நிலையில்.. விரைவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வேன் என்று அண்ணாமலை தரப்பு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அமித் ஷா டெல்லிக்கு திரும்பி சில நாட்களிலேயே பாஜகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல் மாற்றம்
அதன்படி புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 420 பொறுப்புகள் பாஜகவில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் மாற்றப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த முறையும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதில் முழுக்க முழுக்க அண்ணாமலை ஆதரவாளர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரீ ஹேண்ட்
அண்ணாமலை கட்சிக்குள் அதிரடியில் இறங்கிவிட்டார். வரும் நாட்களில் இன்னும் பல மாற்றங்களை அவர் செய்ய வாய்ப்புகள் உள்ளன. டெல்லி பாஜகவும் இவருக்கு முழு ஆதரவு கொடுக்கிறது என்பதால், சீனியர்கள் இருந்த இடத்தில் பல இளம் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவியும் விரைவில் நிரப்பப்படும் என்கிறார்கள்.

இலங்கை பயணம்
இது போக அண்ணாமலையின் இலங்கை பயணமும் அமித் ஷா வருகைக்கு பின்பே அமைந்துள்ளது. இதுவும் அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அண்ணாமலை திடீரென இலங்கை சென்றது ஏன்? அங்கு தமிழ் தலைவர்களை சந்தித்தது ஏன்? அவருக்கு எதுவும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறதா .. சரியாக தமிழ் தலைவர்களை தேடி தேடி சந்திக்கிறாரே என்று அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளதும். சரியாக அமித் ஷா வருகைக்கு பின்புதான் தமிழக பாஜகவில் அதிரடிகள் நடக்க தொடங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications