மாதம் ₹9,-250 வருது.. யாரும் கவனிக்காத தபால் நிலைய சேமிப்பு ரகசியம்! 5 வருடம் அமைதி வாழ்க்கை எப்படி
சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்கும் தபால் துறை, சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.. இதில் பங்குச் சந்தை அபாயங்கள் எதுவுமே இல்லாமல், அதேசமயம் முதலீடு செய்யும் அசலுக்கு முழுமையான பாதுகாப்புடன் லாபத்தை அள்ளித் தரும் ஒரு திட்டம்தான் "தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம்" (Post Office Monthly Income Scheme - MIS).. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
2026-ம் ஆண்டில் வங்கிகளின் வட்டி விகிதங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது..

இந்த திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே, நீங்கள் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவிட்டால், அடுத்த மாதமே அதற்கான வட்டித் தொகையை உங்கள் கையில் வாங்கிக் கொள்ள முடியும்.. இது ஓய்வு பெற்ற முதியவர்களுக்கும், குடும்ப செலவுகளுக்கு கூடுதல் வருமானம் தேவைப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் உதவியாக இருக்கிறது..
இப்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.. நீங்கள் கணக்கு தொடங்கும் நேரத்தில் இருக்கும் வட்டி விகிதமே, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மாறாமல் நிலையான வருமானத்தைத் தந்து கொண்டே இருக்கும்..
முதலீட்டு வரம்பை பொறுத்தவரை, ஒரு தனி நபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.. அப்படி 9 லட்சம் ரூபாயை நீங்கள் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாசமும் உங்களுக்கு 5,550 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும்.
இதுவே கணவன் மற்றும் மனைவி இணைந்து ஒரு கூட்டுக் கணக்கை தொடங்கினால், அவர்கள் மொத்தமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய தபால் துறை அனுமதிக்கிறது.. இந்த 15 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு மாதந்தோறும் சரியாக 9,250 ரூபாய் வட்டித்தொகையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்..
இந்தத் திட்டத்தைத் தொடங்குவது ரொம்பவும் ஈஸி.. அருகிலுள்ள எந்தவொரு தபால் நிலையத்திற்கும் சென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்கி, அதனுடன் இந்த எம்ஐஎஸ் திட்டத்தை இணைத்துக் கொள்ளலாம்..
18 வயது பூர்த்தியடைந்த யாருமே இதில் சேரலாம். மைனர் குழந்தைகளின் பெயரிலும் அவர்களது பெற்றோர் கணக்கைத் தொடங்கிப் பராமரிக்க முடியும்.. 5 ஆண்டுகள் முடிந்த பிறகு உங்கள் அசல் தொகை முழுவதையும் நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது அன்றைய வட்டி விகிதத்திற்கு ஏற்ப மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்குத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது..
கணக்கு தொடங்கிய முதல் ஒரு வருடத்திற்குள் பணத்தை எடுக்க முடியாது.. ஒரு வருடம் முடிந்த பிறகு மட்டுமே முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம்.... ஆனால் ஒரு வருடம் முதல் 3 வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால் அசலில் இருந்து 2 சதவீதம் அபராதமாக பிடிக்கப்படும்.
3 வருடங்களுக்கு பிறகு எடுத்தால் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.. அதனால் நீண்ட கால அடிப்படையில் நிலையான லாபத்தை விரும்புபவர்கள், பணத்தை 5 ஆண்டுகள் வரை அப்படியே வைத்திருப்பதுதான் அதிக லாபத்தைத் தரும்..
இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.. எனவே அதை வருமான வரி கணக்கில் காட்டுவது அவசியம்..
இன்றைய காலக்கட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதை விட, அரசின் நேரடி பாதுகாப்பில் இருக்கும் தபால் நிலையத் திட்டங்கள் மிகவும் நம்பகமானவை.. அதிலும் குறிப்பாக, மாதந்தோறும் கையில் பணம் வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தை விடச் சிறந்த ஆப்ஷன் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால், பலரும் ஆர்வத்துடன் தபால் நிலையங்களை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள்..!!












Click it and Unblock the Notifications