இபிஎஸ் குறித்து யாராலும் பேசப்படாத, வெளியுலகத்திற்கு வராத ஒரு கருத்து இருக்கு.. கே.சி.பழனிசாமி தகவல்
சென்னை: பிரதமர் மோடியின் ஆதரவு யாருக்கு என்பதில்தான் ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் போட்டியாக உள்ளது என அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிசாமி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போலும் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போலும் தேர்தல் நடத்தப்பட்டுதான் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை எம்ஜிஆர் காலத்து நிர்வாகியான முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதிமுக தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் அவர் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் கே சி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி
இந்த கூட்டத்தில் கே.சி.பழனிசாமி பேசுகையில் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமை என்ற ஒன்றை முன்னெடுத்தார். அது உண்மையிலேயே நல்ல முடிவுதான். ஆனால் அந்த ஒற்றைத் தலைமை தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டியது வரவேற்கத்தக்கதாகும்.

பிரச்சினை
ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என அவரால் நியமிக்கப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வைத்து நியமித்துக் கொண்டது தவறு. இதே தவறைதான் அன்று சசிகலாவும் செய்தார். அதை தவறு என எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் வாதிட்டார்கள்.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 ஆண்டுகாலம் தலைமை பொறுப்பில் இருந்திருக்க வேண்டும். அடுத்தது எல்லாவற்றையும் விட யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தவறான செயல்.

போட்டி
எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே ஒரு போட்டி நிலவுகிறது. அதாவது தங்களில் யாரை பிரதமர் மோடி சந்திக்கிறார் என்ற போட்டிதான். இருவருக்கும் மோடி ஆதரவு உண்டு. ஆனால் யாருக்கு முதல் ஆதரவு என்பதை டெஸ்ட் செய்ய இவர்கள் இருவரும் போட்டி போடுவார்கள். எம்ஜிஆர் காலத்தில் அவரை பார்க்க ராமாவரம் தோட்டத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் எத்தனையே பேர் வருவார்கள். அப்போது தொண்டர்களையும் அவர் சந்திப்பார். தொண்டர்களின் முகத்தை வைத்தே பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து உடனே தொண்டர்கள் மாநாட்டை கூட்ட சொல்வார் என கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications