விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம்- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்
Recommended Video
சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவயில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக வைகோ பேசுகையில் இனத்தை அழித்த பாவிகளின் தயவில் நான் எம்பியாக மாட்டேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்களும் ஸ்டாலினும்தான் என காட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி கூறுகையில் காங்கிரஸ் தயவால் எம்பியானார் என ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தெரிவித்தார். நான் பேசவில்லை.

ஆட்சேபணை
நாங்கள் வைகோவை நிறுத்தக் கூடாது என கூறியிருந்தால் ஸ்டாலின் நிச்சயம் அவருக்கு சீட் வழங்கியிருக்க மாட்டார். வைகோவுக்கு எம்பி பதவியை கொடுக்க காங்கிரஸ் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

அமித்ஷா அனுமதி
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைகோவுக்காக மறைமுகமாக வாக்களித்தனர். முதலில் மாநிலங்களவையில் காஷ்மீர் குறித்த விவாதத்தின் மீது பேசுவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் குறித்து விமர்சித்து பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதால்தான் அவருக்கு பேச அமித்ஷா அனுமதி கொடுத்தார்.

பிரபாகரன்
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம். போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டது அனைவருக்கும் தெரியும்.

விரிசல்
ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என கொள்கை அமைத்து கொடுத்தது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications